Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

தேசியப்பட்டியலுக்காக முஸ்லிம்களின் தேசப்பற்றை மலினப்படுத்த சிலர் சதி; உலமாக்கள் விழிக்க வேண்டிய தேர்தலும் இதுவே"! -ரிஷாட்!

T

The Leader Desk

செப்டம்பர் 5, 2024 • 12:42 PM

தேசியப்பட்டியலுக்காக முஸ்லிம்களின் தேசப்பற்றை மலினப்படுத்த சிலர் சதி; உலமாக்கள் விழிக்க வேண்டிய தேர்தலும் இதுவே"! -ரிஷாட்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மற்றும் அமோக மக்கள் ஆதரவுள்ள கட்சிகளும் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கையில், சிலர் வேறு வேட்பாளர்களுக்காக உழைப்பது கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
  • நாங்கள் குற்றம் செய்தா சிறைக்குப் போனோம்?
  • சஜித் பிரேமதாசவை ஆதரித்து திஹாரியில் இடம்பெறும் மக்கள் பேரணியில் உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்; “..அன்று நோலிமிட் எரிந்தது, திகன, அளுத்கம எரிக்கப்பட்டன.
எழுத்து அளவு:

மற்றும் அமோக மக்கள் ஆதரவுள்ள கட்சிகளும் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கையில், சிலர் வேறு வேட்பாளர்களுக்காக உழைப்பது கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவை ஆதரித்து திஹாரியில் இடம்பெறும் மக்கள் பேரணியில் உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்;
 
“..அன்று நோலிமிட் எரிந்தது, திகன, அளுத்கம எரிக்கப்பட்டன. அப்போதும் இப்போதும் ஏன், அன்று ஈஸ்டர் தாக்குதலில் பலர் கைதானார்கள் அப்போதும் நாம் ஓடி ஓடி உங்களுக்காக பாடுபட்டோம். நன்றி மறக்காதீர்கள் அப்போது இரவு பகல் பாராமல் நாம் உங்களுக்காக இருந்தோம். வாக்குக் கேளுங்கள் ஆனால் எங்களை ஏசி வாக்குக் கேட்காதீர்கள். நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என பொய் சொல்லி வாக்குக் கேட்காதீர்கள். 
 
நீங்கள் தேசியப் பட்டியல் எம்பி பெறுவதற்காக இந்த சமுதாயத்தை ஏமாற்றி பொய் சொல்லி வாக்குக் கேட்காதீர்கள். நாங்கள் குற்றம் செய்தா சிறைக்குப் போனோம்? ஈஸ்டர்குண்டுத் தாக்குதலுக்கும் எமக்கும் என்ன தொடர்பு? அன்று நாம் குரல் கொடுத்தோம்? பாராளுமன்றில் கொதித்தெழுந்தோம்.. நான் மட்டுமா தண்டிக்கப்பட்டேன்? எனது மனைவி, மாமா, மச்சான், எனது தம்பி என்று தண்டிக்கப்படோம்.. எமது சமூகமே, தமிழ் சமூகமே, மலையக சமூகமே சிங்கள சமூகமே சஜித் பிரேமதாசவுக்காக வீடு வீடாகச் செல்லுங்கள் சஜித்திற்காக உழையுங்கள், வாக்களியுங்கள் என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தேசியப்பட்டியலுக்காக முஸ்லிம்களின் தேசப்பற்றை மலினப்படுத்த சிலர் சதி; உலமாக்கள் விழிக்க வேண்டிய தேர்தலும் இதுவே"! -ரிஷாட்! | Tamil Leader | We Lead the Nation