Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

அநுராதபுரம் முன்னாள் ஏஎஸ்பி சஞ்சீவ மஹாநாம கைது!

T

The Leader Desk

செப்டம்பர் 5, 2024 • 12:08 PM

அநுராதபுரம் முன்னாள் ஏஎஸ்பி சஞ்சீவ மஹாநாம கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துக்கு உதவிய அநுராதபுரம் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ஏஎஸ்பி) சஞ்சீவ மஹாநாமவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
  • பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
  • இந்த துப்பாக்கிச் சூட்டில் காரின் கண்ணாடி சேதமடைந்தது, ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் காயமடையவில்லை.
எழுத்து அளவு:

உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட   சம்பவத்துக்கு உதவிய  அநுராதபுரம் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ஏஎஸ்பி) சஞ்சீவ மஹாநாமவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளின்படி முன்னாள் எம்.பி முன்னாள் பொலிஸ் அத்தியட்சகருடன் சேர்ந்து இந்த சம்பவத்தை திட்டமிட்டுள்ளார்.
 
பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காரின் கண்ணாடி சேதமடைந்தது, ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் காயமடையவில்லை.
 
இச்சம்பவத்தையடுத்து, பொலிஸ் திணைக்களத்தின் முறையான அனுமதியின்றி  பொலிஸ் அத்தியடசகர் மஹாநாமா நாட்டை விட்டு வெளியேறியதையடுத்து, இது தொடர்பாக தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
 
இந்நிலையிலேயே மாலபே பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னாள் ஏ.எஸ்.பி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...