Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

திகாம்பரம், ரிஷாத் பதியுதீன் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு!

T

The Leader Desk

செப்டம்பர் 4, 2024 • 3:33 PM

திகாம்பரம், ரிஷாத் பதியுதீன் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமும் இணைந்து கொண்டார்.
  • இதேவேளை தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன், நோர்வுட், அக்கரபத்தனை, மஸ்கெலியா, நுவரெலியா உள்ளுராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் 11 பேர், பொது வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக இன்று அவருடன் இணைந்து கொண்டனர்.
  • இதுதவிர, புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் நடராஜா ரவிகுமார், பொதுச் செயலாளர் யோகராஜா பிள்ளை உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர் குழுவும் இன்று சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்ய இன்று அவருடன் இணைந்து கொண்டார்கள்.
  • ஊடகப் பிரிவு Ranil 2024 - இயலும் ஸ்ரீலங்கா 04-09-2024.
எழுத்து அளவு:

வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ரிசாத் பதியுதீன் தலைமை வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் செயற்பாட்டு மக்கள் பிரதிநிதிகள் பலர், சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இன்று அவருடன் இணைந்து கொண்டனர். 

இது தவிர புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பொது வேட்பாளரான ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் செய்னுல் ஆப்தீன் எஹியா உட்பட பல உள்ளுராட்சி சபை முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இன்று  (04) கொழும்பு பிளவர் வீதியில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரின் வெற்றிக்குப் பூரண ஆதரவை வழங்குவதாக அறிவித்தனர். இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமும் இணைந்து கொண்டார்.

இதேவேளை தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன், நோர்வுட், அக்கரபத்தனை, மஸ்கெலியா, நுவரெலியா உள்ளுராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் 11 பேர், பொது வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக இன்று அவருடன் இணைந்து கொண்டனர். ஜனாதிபதியின் வெற்றிக்காகத் தாம்  தொடர்ந்து அர்ப்பணிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுதவிர, புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் நடராஜா ரவிகுமார், பொதுச் செயலாளர் யோகராஜா பிள்ளை உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர் குழுவும் இன்று சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்ய இன்று அவருடன் இணைந்து கொண்டார்கள்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணிலின் கரத்தைப் பலப்படுத்தும் நோக்குடன் ஏற்கெனவே பல தமிழ், முஸ்லிம் கட்சிகளும் மாகாண சபை, உள்ளுராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்களும் செயற்பாட்டாளர்களும் இணைந்து அவரின் வெற்றியை பெருவெற்றியாக்க செயற்பட்டு வருகின்றனர்.

 

ஊடகப் பிரிவு

Ranil 2024 - இயலும் ஸ்ரீலங்கா

04-09-2024

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...