Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

மதுபான கோட்டாக்களை பெற்றுக்கொண்டோரின் விபரங்கள் சஜித்தின் ஆட்சியில் வெளியிடப்படும்! -ரிஷாத் பதியுதீன்

T

The Leader Desk

செப்டம்பர் 4, 2024 • 8:37 AM

மதுபான கோட்டாக்களை பெற்றுக்கொண்டோரின் விபரங்கள் சஜித்தின் ஆட்சியில் வெளியிடப்படும்! -ரிஷாத் பதியுதீன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரணிலை ஆதரித்தோர், இரகசியமாக மதுபான "கோட்டாக்களை" பெற்றுக்கொண்டோரின் விபரங்கள் சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் பகிரங்கப்படுத்தப்ப டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
  • ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை (03) மன்னாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத ஆட்சியால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்தது.
  • நாங்கள் செய்தவற்றை நிறுத்துவதற்கென்றே, இங்கு ஒரு இராஜாங்க அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

ரணிலை ஆதரித்தோர், இரகசியமாக மதுபான "கோட்டாக்களை" பெற்றுக்கொண்டோரின் விபரங்கள்  சஜித் பிரேமதாசவின்  ஆட்சியில் பகிரங்கப்படுத்தப்ப டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை (03) மன்னாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத ஆட்சியால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்தது. சிங்களப் பெரும்பான்மை வாக்குகளாலேயே, ஆட்சிக்கு வந்ததாக மமதையுடன் நடந்துகொண்டார் கோட்டா. மதங்களைப் புண்படுத்துமளவுக்கு அவரது மனநிலை இறுமாப்படைந்தது. கொரோணாவில் மரணித்த முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தீயில் எரித்தார். இந்த அராஜகத்துக்கு உடந்தையாக இருந்த அமைச்சர்கள், எம்.பி.க்களே இன்று ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளனர்.

நாங்கள் செய்தவற்றை நிறுத்துவதற்கென்றே, இங்கு ஒரு இராஜாங்க அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்டுக்கரைக்குளம், வியாயடிக்குளம், நெடுங்கண்டல் குளம் மற்றும் அஹத்திக்குளம் போன்ற விவசாயக் குளங்களைப் புனரமைத்து, இருபோக நெற்செய்கைக்கு வாய்ப்புக்களை வழங்கவுள்ளோம்.

இங்கே வெள்ளமாகத் திரண்டுள்ள மக்கள் பணத்துக்காகவோ, சாப்பாட்டுப் பார்சல்களுக்காவோ சேர்த்த கூட்டமல்ல. சஜித் பிரேமதாசவை வெல்லவைக்கும் ஒரே வேட்கையோடு சேர்ந்த கூட்டம். சஜித்தின் வெற்றிக்காக அமோக ஆதரவளித்த பெருமையில் முதலிடம் பிடிக்க, மன்னார் மாவட்ட மக்கள் முந்திக் கொள்ள வேண்டும்.

இந்தியாவுக்கு பாலம் அமைத்து வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்வோம்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...