Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சஜித்தின் கையில் அநுரவின் விஞ்ஞாபனமென பகிரப்படுவது போலியான புகைப்படமாகும்!

T

The Leader Desk

செப்டம்பர் 4, 2024 • 7:41 AM

சஜித்தின் கையில் அநுரவின் விஞ்ஞாபனமென பகிரப்படுவது போலியான புகைப்படமாகும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேசிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
  • Facebook page : https://www.facebook.com/photo/?fbid=1077330697086495&set=pcb.1077331357086429 அதேபோல், தேசிய பத்திரிகைகளிலும் இப்புகைப்படத்தை காண முடிந்தது.
  • இப்புகைப்படம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் காணக்கூடியதாக இருந்தது.
எழுத்து அளவு:

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேசிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

இப் புகைப்படம் X மற்றும் YOUTUBE தளங்களில் பகிரப்பட்டிருப்பதால் factseeker இதனை ஆராய்ந்தபோது, இந்த புகைப்படம் ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்ட போது தலதா மாளிகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என அறியமுடிந்தது.
 
IMG 20240904 130102 800 x 533 pixel
 
இப்புகைப்படம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் காணக்கூடியதாக இருந்தது.
 
 
அதேபோல், தேசிய பத்திரிகைகளிலும் இப்புகைப்படத்தை காண முடிந்தது.
 
IMG 20240904 130042 800 x 533 pixel
 
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வைத்திருப்பது போன்ற சமூக வலைதளங்களில்  பகிரப்படும் புகைப்படம் திரிபுபடுத்தப்பட்ட புகைப்படம் என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சஜித்தின் கையில் அநுரவின் விஞ்ஞாபனமென பகிரப்படுவது போலியான புகைப்படமாகும்! | Tamil Leader | We Lead the Nation