Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சனிக்கிழமை நேரடி விவாதத்தில் சஜித் உட்பட நால்வர்: கலந்து கொள்ள முடியாது என்கிறார் ரணில்!

T

The Leader Desk

செப்டம்பர் 4, 2024 • 6:07 AM

சனிக்கிழமை நேரடி விவாதத்தில் சஜித் உட்பட நால்வர்: கலந்து கொள்ள முடியாது என்கிறார் ரணில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வேட்பாளர்களின் நேரடி விவாதம் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.
  • மார்ச் 12 இயக்கம் இந்த தொடர் விவாதங்களை நடத்துகிறது.
  • தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் பங்கேற்பு உறுதிப்படுத்தப்படவுள்ளது.
  • சுற்று 2 மற்றும் 3 க்கு மேலும் 12 பேர்.
எழுத்து அளவு:

வேட்பாளர்களின் நேரடி விவாதம் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மார்ச் 12 இயக்கம் இந்த தொடர் விவாதங்களை நடத்துகிறது.

முதல் நாள் விவாதத்தில் நான்கு வேட்பாளர்கள் பங்கேற்பார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷ, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திலித் ஜயவீர, சுயேச்சை வேட்பாளர் பி. அரியநேத்திரன்  ஆகியோர்கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த விவாதத்தில் கலந்து கொள்ள முடியாது என சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த அமைப்புக்கு அறிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் பங்கேற்பு உறுதிப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

சுற்று 2 மற்றும் 3 க்கு மேலும் 12 பேர்.

இந்த விவாதத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்டத்தில் 12 வேட்பாளர்கள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விவாதங்கள் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

விவாதத்தின் போது வேட்பாளர்களுக்கு கேள்விகளை சமர்ப்பிக்க வாக்காளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கேட்கப்படும் கேள்விகள் குழுவால் தீர்மானிக்கப்படும் என்றும் மார்ச் 12 பிரசாரம் குறிப்பிடுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...