Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சாய்ந்தமருதுவில் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைதான அரச உத்தியோகத்தர்!

T

The Leader Desk

செப்டம்பர் 4, 2024 • 5:46 AM

சாய்ந்தமருதுவில் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைதான அரச உத்தியோகத்தர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலட்சம் ரூபா ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
  • வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேக நபர் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளை பைகளில் உறையிடப்பட்டு மிக சூட்சுமமாக கொண்டு சென்ற நிலையில் மோட்டார் சைக்கிளுடன் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றினர்.
  • குறித்த நபர் சம்மாந்துறை பகுதியில் உள்ள கல்வி திணைக்களத்தில் பணிபுரிவதுடன் சூட்சுமமாக ஐஸ் போதைப்பொருளை சாய்ந்தமருது உட்பட கல்முனைக்கு நீண்ட காலமாக விநியோகித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:
இலட்சம் ரூபா ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை    கல்முனை விசேட அதிரடிப்படையினர்  கைது செய்துள்ளனர்.
 
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் விசேட தேர்ச்சி பெற்ற  புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய  கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில்  சென்று விநியோகம் செய்து வந்த குறித்த  சந்தேக நபரை சாய்ந்தமருது  பிரதான வீதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (3)   கைது செய்துள்ளனர்.
 
குறித்த நபர் சம்மாந்துறை பகுதியில் உள்ள கல்வி திணைக்களத்தில் பணிபுரிவதுடன் சூட்சுமமாக ஐஸ் போதைப்பொருளை சாய்ந்தமருது உட்பட  கல்முனைக்கு நீண்ட காலமாக விநியோகித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
43  வயது மதிக்கத்தக்க  குறித்த சந்தேக நபர் 25 கிராம் ஐஸ்   போதைப்பொருளை  பைகளில் உறையிடப்பட்டு மிக சூட்சுமமாக கொண்டு சென்ற நிலையில் மோட்டார் சைக்கிளுடன்  கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றினர்.
 
அத்துடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது  பொலிஸ் நிலையத்தில்  சந்தேக நபர்  மற்றும் சான்றுப்பொருட்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
 
மேலும்  இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை   அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு அம்பாறை  மாவட்ட    உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான  சம்பத் குமாரஇஅசித ரணசூரிய  ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான  அதிகாரிகள்  முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...