Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

தான் ஆட்சிக்கு வந்தால் இரத்துச் செய்யப்படும் விடயங்கள் தொடர்பில் அநுரகுமார மனம் திறந்தார்!

T

The Leader Desk

செப்டம்பர் 3, 2024 • 11:34 AM

தான் ஆட்சிக்கு வந்தால் இரத்துச் செய்யப்படும் விடயங்கள் தொடர்பில் அநுரகுமார மனம் திறந்தார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மரியாதை மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைந்தவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
  • அமைச்சர்களின் பின்னால் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் செல்வது ஒழிக்கப்படும் எனவும், அச்சுறுத்தல் ஏற்பட்டால் மாத்திரம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், அச்சுறுத்தல் இல்லாவிட்டால் அமைச்சரின் கதவை திறக்க பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • முன்னாள் ஜனாதிபதிகளை கவனிப்பதை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும், அதன்பின்னர் நாட்டின் மீது ஆசை கொண்டவர்களே அரசியலுக்கு வருவார்கள் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

மரியாதை மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைந்தவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும், அமைச்சர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம், மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் செலுத்துவது என்பன இரத்துச் செய்யப்படும் என பண்டாரவளையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார்.

அமைச்சர்களின் பின்னால் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் செல்வது ஒழிக்கப்படும் எனவும், அச்சுறுத்தல் ஏற்பட்டால் மாத்திரம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், அச்சுறுத்தல் இல்லாவிட்டால் அமைச்சரின் கதவை திறக்க பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளை கவனிப்பதை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும், அதன்பின்னர் நாட்டின் மீது ஆசை கொண்டவர்களே அரசியலுக்கு வருவார்கள் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...