Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கிளப் வசந்த கொலை: கைதான அமல் சில்வாவுக்கு விளக்கமறியல்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 31, 2024 • 12:04 PM

கிளப் வசந்த கொலை:  கைதான அமல் சில்வாவுக்கு விளக்கமறியல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
  • ஆம் திகதி காலை அமல் சில்வா கைது செய்யப்பட்டு பின்னர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
  • கடுவெல பதில் நீதிவான் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எழுத்து அளவு:

சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடுவெல பதில் நீதிவான் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 
29ஆம் திகதி காலை அமல் சில்வா கைது செய்யப்பட்டு பின்னர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
 
கொலையை செய்ய வந்த நபர்களுக்கு தங்குமிட வசதி மற்றும் ஆதரவை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் மேற்கு தெற்கு குற்றப் பிரிவினரால் இஙர் கைது செய்யப்பட்டார்.
 
ஜூலை 8ஆம் திகதி அதுருகிரியவில் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்தவை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த காரை ஓட்டிச் சென்ற சாரதி ஆகியோர் 28ஆம் திகதி இரவு பாணந்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். 
 
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கிளப் வசந்த கொலை: கைதான அமல் சில்வாவுக்கு விளக்கமறியல்! | Tamil Leader | We Lead the Nation