Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ரிஷாத் பதியுதீனும் நிசாம் காரியப்பரும் சஜித்துக்காக இந்தியாவுக்கு வழங்கிய உத்தரவாதம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 31, 2024 • 7:33 AM

ரிஷாத் பதியுதீனும் நிசாம் காரியப்பரும்  சஜித்துக்காக இந்தியாவுக்கு வழங்கிய உத்தரவாதம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் முஸ்லிம் கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்தார்.
  • இந்த சந்திப்பின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதிப்படுத்தி அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் ரிஷாடத் பதியுதீன் மற்றும் அமிர் அலியும் பங்கு பற்றினாரகள்.
எழுத்து அளவு:

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் முஸ்லிம் கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதிப்படுத்தி அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் ரிஷாடத் பதியுதீன் மற்றும் அமிர் அலியும் பங்கு பற்றினாரகள்.
 
இந்தச் சந்திப்பின்போது தங்களுடைய இரு கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு எடுத்த பின்னணியில் இலங்கையில் முக்கியமாக வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் 90 சத வீதமான முஸ்லிம் மக்கள் நிச்சயமாக சஜித் பிரேமதாசாக்கு வாக்களிப்பார்கள் என்ற விடயத்தை தெரிவித்தார்கள். 
 
Nizam kariyappar 087
 
தற்போதைய பிரசாரக் கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன் மக்கள் நிறைந்து காணப்பட்டதையும் அவரிடம் எடுத்துக் கூறினார்கள்.
 
மேலும் எதிர்காலத்தில் புதிதாக உருவாக்கப்படும் சஜித் பிரேமதாஸவின் அரசாங்கத்தில் தாங்கள் முக்கிய பொறுப்புகள் வைகிப்போம் என்றும் ஆகவே புதிய அரசாங்கத்தின் வெளிவிவாகர கொள்கைகள் நிச்சயமாக இந்தியாவின் நேச சக்திக்கு முரணாக இருக்க மாட்டாது என்றும் உத்தரவாதம் வழங்கப்பட்டது. 
 
ஆகவே இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு இலங்கைக்கு கிடைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் பொருளாதார விடயங்கள் உட்பட சிறுபான்மையினரின் உரிமை சம்பந்தமான விடயங்களிலும் அவர்களுடைய பங்களிப்பு இருக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக கூறினார்கள். 
 
இந்த விடங்கள் தொடர்பில் இந்தியாவும் சாதகமான நிலைப்பாட்டில் இருப்பதாக இந்தியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...