Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ரங்கே பண்டாரவின் வெற்றிடத்துக்கு தலதா அத்துகோரளவை நியமிக்க. வலுக்கும் கோரிக்கை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 30, 2024 • 7:01 AM

ரங்கே பண்டாரவின் வெற்றிடத்துக்கு தலதா அத்துகோரளவை நியமிக்க. வலுக்கும் கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
  • ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பாலித ரங்கே பண்டாரவை நீக்குவது தொடர்பான கடிதத்தில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று (29) கையொப்பமிட்டுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிய தலதா அத்துகோரளவை நியமிக்குமாறு, கட்சியின் பெரும்பான்மையான முக்கியஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
எழுத்து அளவு:

பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பாலித ரங்கே பண்டாரவை நீக்குவது தொடர்பான கடிதத்தில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று (29) கையொப்பமிட்டுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுச் செயலாளர் பதவி தொடர்பான கடமைகளை பாலித ரங்கே பண்டார உரிய முறையில் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கட்சித் தலைமை உரிய தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிய தலதா அத்துகோரளவை நியமிக்குமாறு, கட்சியின் பெரும்பான்மையான முக்கியஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

எனினும், இதுவரை தலதா அத்துகோரள ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை எடுக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் பாலித ரங்கே பண்டாரவிடம் வினவியபோது, ​​அது தொடர்பில் இதுவரையில் தமக்கு எவ்வித அறிவித்தல்களும் வரவில்லை என அவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...