Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

அரசியல் சூழ்ச்சி மூலம் பதவியைத் தக்கவைக்க ஜனாதிபதி ரணில் சதி என்கிறார் விமல் வீரவங்ச!

T

The Leader Desk

ஆகஸ்ட் 30, 2024 • 4:14 AM

அரசியல் சூழ்ச்சி மூலம் பதவியைத் தக்கவைக்க ஜனாதிபதி ரணில் சதி என்கிறார் விமல் வீரவங்ச!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசியல் சூழ்ச்சி மூலம் பதவியில் இருக்கச் சதி செய்வதாக குற்றம் சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இது 2022 மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களைப் போன்று வன்முறைக்கு வழிவகுக்கும் என எச்சரித்தார்.
  • ஆனால் ரணில் விக்கிரமசிங்க சஜித்தை அம்பலப்படுத்துகிறார்.
  • தலதா நீக்கப்பட்டார், மேலும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு கட்சிகள் விலகும் என்று கேள்விப்படுகிறேன்.
எழுத்து அளவு:

அரசியல் சூழ்ச்சி மூலம் பதவியில் இருக்கச் சதி செய்வதாக குற்றம் சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இது 2022 மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களைப் போன்று வன்முறைக்கு வழிவகுக்கும் என எச்சரித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவும் இலங்கைக்கான தனது தூதுவரும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். 
 
சில காரணங்களால் சஜித் பிரேமதாச இதற்கு இணங்கவில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்க சஜித்தை அம்பலப்படுத்துகிறார். தலதா நீக்கப்பட்டார், மேலும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு கட்சிகள் விலகும் என்று கேள்விப்படுகிறேன். இதனால் யார் பலவீனமடைவார்கள்?” என அண்மையில் ஐக்கிந மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறியமை தொடர்பில் வீரவன்ச கேள்வி எழுப்பினார். 
 
கட்சித் தாவல்கள் பிரேமதாசாவை பலவீனமான நிலைக்கு தள்ளும் என்றும், அது மூன்றாம் தரப்புக்கு அது உதவும் என்றும் அவர் கூறினார்.
 
இந்த குறிப்பிட்ட மூன்றாம் தரப்பினர் தேர்தலுக்கு முன்னர் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கு கூட்டுச் சேர்ந்து கொண்டிருப்பதாகவும், இது இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அரசியலமைப்பின் சில விதிகளின் கீழ் பதவியில் நீடிக்க உதவும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டினார். 
 
அடுத்த ஜனாதிபதி பதவியேற்கும் வரை தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருப்பார் என அரசியல் சாசனம் கூறுகிறது எனவும் வீரவன்ச தெரிவித்துள்ளார். 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...