Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஹரீஸ் எம்பியின் சத்தியக்கடதாசி தொடர்பில் மு.கா செயலாளர் நிசாம் காரியப்பர்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 29, 2024 • 5:33 AM

ஹரீஸ் எம்பியின் சத்தியக்கடதாசி  தொடர்பில் மு.கா செயலாளர் நிசாம் காரியப்பர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனக்கு ஆரம்ப இரண்டு வாரங்களாக சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டங்களுக்கு வர முடியாமல் போனதற்கு காரணம் தனது சுகவீனம் என்றும் அதை நிரூபிப்பதற்கு உரிய வைத்திய அத்தாட்சிப்பத்திரம் இணைத்து அனுப்பியுள்ளார்.
எழுத்து அளவு:

தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று மாலை (28)  மருதமுனை தனியார் விடுதியில் கட்சியின் உயர்பீடக் கூட்டம் இடம்பெற்றது. 

இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் உயர் பீட அங்கத்துவத்தை இடைநிறுத்தி அனுப்பப்பட்ட கடிதத்துக்கு அவர் சத்தியக்கடதாசி மூலமாக தனது பதிலை தலைவருக்கு அனுப்பிய விவகாரம் ஆராயப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், மிகத் தெளிவாக  கூறியுள்ள விடயம் யாதெனில் தான் 2024.08.04 ஆம் திகதி கூடி உச்ச பீடம் எடுத்த முடிவுடன் முற்று முழுதாக இருப்பதாகவும் தனக்கு இது தொடர்பில் எந்த மாற்றுக் கருத்து இல்லை என்றும் தெளிவாக தெரிவித்துள்ளார்.
 
தனக்கு ஆரம்ப இரண்டு வாரங்களாக சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டங்களுக்கு வர முடியாமல் போனதற்கு காரணம் தனது சுகவீனம் என்றும் அதை நிரூபிப்பதற்கு உரிய வைத்திய அத்தாட்சிப்பத்திரம் இணைத்து அனுப்பியுள்ளார்.
 
மேலும் அதற்குப் பிற்பாடு நடத்தப்பட்ட சஜித் பிரேமதாசவுக்கான சகல பிரசாரக் கூட்டங்களுக்கும் தொடர்ச்சியாக கலந்து கொண்டிருந்தார். 
 
இதனடிப்படையில் அவரால் அனுப்பப்பட்ட சத்திய கடுதாசியை ஆராய்ந்த உயர் பீடம்,  ஹரிஸின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு எதிரான அங்கத்துவத்தை இடைநிறுத்தும் தீர்மானத்தை  நீக்கிக் கொண்டது என நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...