Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

பாலித ரங்கே பண்டாரவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்க ஜனாதிபதி ரணில் தீர்மானம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 29, 2024 • 5:06 AM

பாலித ரங்கே பண்டாரவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்க ஜனாதிபதி ரணில் தீர்மானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
  • இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தவிர்ந்த ஏனையவர்களிடம் தேர்தல் செயற்பாடுகளுக்கான பொறுப்புக்களை ஒப்படைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நேற்று (28) ஏற்பாடு செய்துள்ளார்.
  • நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், பாலித ரங்கே பண்டார தொடர்பில் கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படும் சில பாரதூரமான விடயங்களை கருத்திற்கொண்டு ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான தீர்மானத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:

பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில்,

பாலித ரங்கே பண்டார தொடர்பில் கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படும் சில பாரதூரமான விடயங்களை கருத்திற்கொண்டு ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான தீர்மானத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் கட்சியின் செயலாளரை எந்த நேரத்திலும் நியமிக்கவும் நீக்கவும் கட்சியின் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

கடந்த சில நாட்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவுக்கு அவர் கடமைகளுக்காக வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தவிர்ந்த ஏனையவர்களிடம் தேர்தல் செயற்பாடுகளுக்கான பொறுப்புக்களை ஒப்படைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நேற்று (28) ஏற்பாடு செய்துள்ளார்.

பிரதிப் பொதுச் செயலாளர் கிரிஷாந்த தியோடர், சிறிகொத்த பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷமல் செனரத், ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, தேர்தல் நடவடிக்கைகளின் தலைவர் ஆகியோரை 'சிறிகொத்த' கட்சியின் தலைமையகத்தில் தங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...