Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

அலி சாஹிர் மெளலானாவை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நீக்க இடைக்காலத் தடை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 28, 2024 • 11:55 AM

அலி சாஹிர் மெளலானாவை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நீக்க இடைக்காலத் தடை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முஸ்லிம் காங்கிரசில் இருந்து நீக்க முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
  • இந்நிலையில் இது தொடர்பில் விளக்கம் கொடுக்க அலி சாஹிர் மௌலானாவுக்கு 01 வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
  • அது தொடர்பான கடிதம் கடந்த 21 ஆம் திகதி பதிவுத் தபால் மூலம் மௌலானா தரப்புக்கு கிடைத்துள்ளது.
  • அந்த ஒரு வார காலம் இன்று இரவு 12 மணி வரையில் இருந்தாலும் இன்றைய தினமே முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் கிழக்குப் பகுதியில் ஒரு இடத்தில் ஒன்று கூடி அலி சாஹிர் மௌலானாவை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கைகளை எடுத்திருந்ததாக கூறப்படுகின்றது.
எழுத்து அளவு:

முஸ்லிம் காங்கிரசில் இருந்து நீக்க முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்தார். நாட்டின் எதிர்காலம் கருதி தாம் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்திருந்தார்.
 
ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்துக்காக நாங்கள் சஜித்தோடு சேர்ந்துள்ளோம் என்று அதற்கு முன்னரே அறிவித்திருந்தது.
 
எவ்வாறாயினும் கட்சியின் முடிவை மீறியதாக தெரிவித்து அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருந்தது.
 
இந்நிலையில் இது தொடர்பில் விளக்கம் கொடுக்க அலி சாஹிர் மௌலானாவுக்கு 01 வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அது தொடர்பான கடிதம் கடந்த 21 ஆம் திகதி பதிவுத் தபால் மூலம் மௌலானா தரப்புக்கு கிடைத்துள்ளது.
 
அந்த ஒரு வார காலம் இன்று இரவு 12 மணி வரையில் இருந்தாலும் இன்றைய தினமே முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் கிழக்குப் பகுதியில் ஒரு இடத்தில் ஒன்று கூடி அலி சாஹிர் மௌலானாவை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கைகளை எடுத்திருந்ததாக கூறப்படுகின்றது.
 
எவ்வாறாயினும் அலி சாஹிர் மௌலானாவை கட்சியின் பதவியில் இருந்து நீக்க முடியாது என்றும் அவருடைய அங்கத்துவத்தை நீக்க முடியாது என்றும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
 
இது தொடர்பாக அலி சாஹிர் மௌலானா தரப்பின் முறைப்பாட்டின் மூலம் இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளது
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...