Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

இலங்கை காதலியான முஸ்லிம் பெண்ணை துன்புறுத்திய இந்திய பிரஜை மல்வானையில் கைது!

T

The Leader Desk

ஆகஸ்ட் 27, 2024 • 7:57 AM

இலங்கை காதலியான முஸ்லிம் பெண்ணை துன்புறுத்திய இந்திய பிரஜை மல்வானையில் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முடிந்து நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவரை பியகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
  • இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
  • இருவரும் சுமார் ஒன்றரை வருடங்களாக துபாயில் பணிபுரிந்து வந்துள்ளனர், அங்கு இருவரும் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர்.
  • இந்நிலையில், இலங்கைப் பெண் நாடு திரும்பியதையடுத்து, குறித்த இந்திய ஆணும் ஜூன் 20ஆம் திகதி இலங்கை தங்கியிருந்தார்.
எழுத்து அளவு:

முடிந்து நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவரை பியகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மல்வான – வல்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசிக்கும் 35 வயதுடைய முஸ்லிம் பெண் ஒருவர், தன்னைத் திருமணம் செய்யவுள்ள இந்தியப் பிரஜையால் பிரச்சினை மற்றும் துன்புறுத்தல்கள் ஏற்படுவதாக செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.
 
இதன்போது, இந்திய பிரஜையின் விசாவின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இருவரும் சுமார் ஒன்றரை வருடங்களாக துபாயில் பணிபுரிந்து வந்துள்ளனர், அங்கு இருவரும் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர். இந்நிலையில், இலங்கைப் பெண் நாடு  திரும்பியதையடுத்து, குறித்த இந்திய ஆணும் ஜூன் 20ஆம் திகதி இலங்கை  தங்கியிருந்தார்.
 
குறித்த இந்திய பிரஜைக்கு அன்றைய தினம் முதல் 30 நாட்கள் வீசா கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் கடந்த ஜூலை 15ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரையில் அவர் விசா நீடிப்பை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கைது செய்யப்பட்ட இந்தியர் மஹர நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...