Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

அளவுக்கு மீறி கட்சி காட்டுப்பாட்டை மறந்தால் நான் கடுமையாக பிரம்பை எடுக்க வேண்டி வரும்! - ரவூப் ஹக்கீம்

T

The Leader Desk

ஆகஸ்ட் 25, 2024 • 7:13 AM

அளவுக்கு மீறி கட்சி காட்டுப்பாட்டை மறந்தால் நான் கடுமையாக பிரம்பை எடுக்க வேண்டி வரும்! - ரவூப் ஹக்கீம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெற்றிபெற வைக்க வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுத்த பின்னர் அதில் மறைந்து விளையாடுவதற்கு யாருக்கும் இடம் கிடையாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
  • அதை நான் உச்ச பீடத்துக்கு சமர்ப்பித்துதான் அவரின் இடைநிறுத்தத்திற்கான நீக்கலை சிந்தித்தோம்.
  • ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:
வெற்றிபெற வைக்க வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுத்த பின்னர் அதில் மறைந்து விளையாடுவதற்கு யாருக்கும் இடம் கிடையாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
 
ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்தும் அவர் பேசுகையில்,
 
நாங்கள் சமூகம் சார்ந்த பல காரணங்களை முன்வைத்து சஜித் பிரமதாசாவை ஆதரிக்கின்றோம்.
 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பலமான கட்சியாகும் அதற்கு கட்டுப்படாதவர்களை நாங்கள் தூக்கி எறிவதற்கு தயங்க மாட்டோம்.
 
இந்த தேர்தலில் நாங்கள் அவ்வாறானவர்காளின் செயற்பாடுகளை மிக கூர்மையாக அவதானிப்போம்.
 
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்,
 
கட்சியின் தீர்மானத்துக்கு மாற்றமாக நடப்பவர்கள் மீது நான் மிகவும் இறுக்கமாக இருப்பேன்.
 
எனது அன்பு, பாசத்திற்கு ஒரு அளவு உள்ளது. அளவு மீறி கட்சி காட்டுப்பாட்டை மறந்தால் நான் கடுமையாக பிரம்பை எடுக்க வேண்டி வரும்.
 
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தாமதித்து வந்தமைக்கான ஒரு காரணத்தை சத்திய கடாதாசி மூலம் தந்திருக்கிறார்.
 
அதை நான் உச்ச பீடத்துக்கு சமர்ப்பித்துதான் அவரின் இடைநிறுத்தத்திற்கான நீக்கலை சிந்தித்தோம்.
 
கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் உத்தரவாதம் தந்துள்ளார்.
 
மிக இறுக்கமாக சொல்கிறேன். இனி ஒருவருக்கும் பயப்படுவதற்கு நான் தயாரில்லை.
 
இந்த தேர்தலில் அவர்கள் எப்படி நேர்மையாக செயற்படுகிறார்கள் என்பதை பொறுத்துத்தான் அடுத்த கட்ட அவர்களுடைய அரசியலுக்கான அங்கீகாரத்தை கட்சி தலைமை வழங்கும்.
 
சஜிதுக்கு பயந்து நான் இந்த தீர்மானத்துக்கு வரவில்லை.  போராளிகளின் ஆத்திரத்துக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். அவர்களின் ஆத்திரத்தை சம்பாதித்தவர்கள் யாராக இருந்தாலும் சரி அதற்கு பின்னர் கட்சியில் நீடிக்க முடியாது.
 
நாங்கள் அமைச்சுப் பதவிகள் கேட்டோ, தேசியப் பட்டியல் கேட்டோ சஜித் பிரமதாசாவுக்கு ஆதரவு வழங்கவில்லை. அவர் இனவாதம் இல்லாத ஒரு தலைவராக காணப்படுகிறார்.
 
எங்களது கட்சி பலமாக இருக்கும் போது நாங்கள் பிச்சை வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
 
அடுத்த அரசாங்கத்தில் எனக்கு அமைச்சுப் பதவி இல்லாமல் வந்தாலும் ஒரு பலமான அரசியல் தலைமையாக என்னால் செயற்பட முடியும் என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...