Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கிளப் வசந்த கொலை: கொலையாளிகளுக்கு தெஹிவளையில் வீடு வழங்கியவரும் கைது!

T

The Leader Desk

ஆகஸ்ட் 25, 2024 • 2:36 AM

கிளப் வசந்த கொலை: கொலையாளிகளுக்கு தெஹிவளையில் வீடு வழங்கியவரும் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட இருவர் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • கிளப் வசந்த கொல்லப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கேபிஐ என அடையாளம் காணப்பட்ட தோட்டாக்கள் போன்றே சந்தேக நபர்களிடம் இருந்து 12 உயிருள்ள தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
  • கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் வைத்து சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
  • கொலைச் சம்பவத்தின் பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும், இலங்கையிலிருந்து கொலைக்கு தலைமை தாங்கிய இருவரையும் பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை என்பதுடன் அவர்களைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் கோரினர்.
எழுத்து அளவு:

சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட இருவர் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் சந்தேக நபர்கள் மூவரும் தெஹிவளை கவுடான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
கிளப் வசந்த கொல்லப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கேபிஐ என அடையாளம் காணப்பட்ட தோட்டாக்கள் போன்றே சந்தேக நபர்களிடம் இருந்து 12 உயிருள்ள தோட்டாக்கள்  கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலர் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் வைத்து சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 
கொலைச் சம்பவத்தின் பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும், இலங்கையிலிருந்து கொலைக்கு தலைமை தாங்கிய இருவரையும் பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை என்பதுடன் அவர்களைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் கோரினர்.
 
இவ்வாறானதொரு பின்னணியில் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன தலைமையில், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்டவர்களில் கிளப் வசந்தவைக் கொல்ல வந்த துப்பாக்கிச் சூடு நடத்திய சண்டி என்ற அஜித் ரோஹனவும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
அவர் 31 வயதான அஹுங்கல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர் 14 ஆவது சிங்கப் படைப்பிரிவில் கடமையாற்றிய முன்னாள் இராணுவ சிப்பாய் ஆவார்.
 
இவர் இதற்கு முன்னரும் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்பதுடன், அத்துருகிரிய பிரதேசத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு வீடு ஒன்றை வாடகைக்கு கொடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பஸ்ஸில் கதிர்காமத்துக்கு அழைத்துச் சென்றவர் என கூறப்படும் வருண இந்திக்க சில்வா எனப்படும் சங்கா என்ற சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
அவர் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
மேலும், சந்தேக நபர்கள் இருவருக்கு தெஹிவளை  கவுடான பிரதேசத்தில் தங்குமிடத்தை வழங்கிய 40 வயதுடைய மொஹமட் இக்பால் மொஹமட் இம்ரான்  என்பவரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...