Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்க்ஷர்கள் குறித்த குழப்பம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 23, 2024 • 11:02 AM

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்க்ஷர்கள் குறித்த குழப்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தலில் 'நாமல் ராஜபக்க்ஷ' என்ற பெயரில் இரு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
  • இவர் சமநிலம் கட்சி சார்பில் கடித உரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
  • இதன்போது பொதுவாக பகிர்ந்துகொள்ளக்கூறிய அடிப்படை விடயங்களை இங்கே வழங்குகின்றோம். லக்ஷ்மன் நாமல் ராஜபக்க்ஷ : அரசியல் கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சின்னம் - தாமரை மொட்டு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்சவின் முழுப் பெயர் "லக்ஷ்மன் நாமல் ராஜபக்ச".
எழுத்து அளவு:

தேர்தலில் 'நாமல் ராஜபக்க்ஷ' என்ற பெயரில் இரு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் இவ் வேட்பாளர்களின் பெயர்கள்  தொடர்பில் பிரதான ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு செய்திகள் குழப்பகரமாக பிரசுரிக்கப்படுவதை அவதானிக்க முடிந்தது. 

மேலும் இவர்கள் இருவரின் பெயரும் வாக்காளர்களை குழப்பும் வகையில் வகையில் இருப்பதால் இதை தெளிவுபடுத்துமாறு factseeker ற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
அதற்கமைய இந்த விவகாரத்தை தெளிவுபடுத்தும் விதமாக factseeker ஆராய்ந்து பார்த்ததில், இருவர் குறித்தும் முழுமையான தேடலில் ஈடுபட்டோம். இதன்போது பொதுவாக பகிர்ந்துகொள்ளக்கூறிய அடிப்படை விடயங்களை இங்கே வழங்குகின்றோம். 
 
IMG 20240823 WA0461
 
லக்ஷ்மன் நாமல் ராஜபக்க்ஷ : 
 
அரசியல் கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
சின்னம் - தாமரை மொட்டு
 
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்சவின் முழுப் பெயர் "லக்ஷ்மன் நாமல் ராஜபக்ச". அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தாமரை மொட்டு  சின்னத்தில் போட்டியிடுகின்றார்.  நாமல் ராஜபக்ச என்று பிரபலமாக அறியப்படும் இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ஆவார். 
 
IMG 20240823 WA0459
அத்துடன், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவான அவர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அதேபோல், கடந்த காலங்களில் பல்வேறு அமைச்சுப்பதவிகளையும் வகித்துள்ளார். 
 
நாமல் அஜித் ராஜபக்க்ஷ: 
 
அரசியல் கட்சி - சமநிலம் கட்சி
 
சின்னம் - கடித உறை 
 
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நாமல் அஜித் ராஜபக்ச வின் முழுப் பெயர் "ராஜபக்க்ஷ ஆராச்சிலாகே  நாமல் அஜித் ராஜபக்ச". இவர் சமநிலம் கட்சி சார்பில் கடித உரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தொழில் ரீதியாக ஒரு சட்டத்தரணி ஆவர். 
இவர்கள் இருவரும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நிலையில், வேட்புமனுத் தாக்கலின் பின்னர் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட  பட்டியலில் இருவரினதும் பெயர்கள் ஒன்றாகவே காணப்படுகின்றது. தேர்தல் வாக்குச்சீட்டில் இருவரது பெயரும் "நாமல் ராஜபக்க்ஷ" என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இது வாக்காளர்களை குழப்பமடையச் செய்யும் விடயம் என்பதால், வாக்காளர்கள் இது பற்றிய தெளிவை பெறுமாறு factseeker வலியுறுத்துகிறது.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்க்ஷர்கள் குறித்த குழப்பம்! | Tamil Leader | We Lead the Nation