Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

உலக கிரிக்கெற் களத்தில் தனித்துவமான உலக சாதனையை நிலைநாட்டிய இலங்கை வீரர் மிலான் ரத்நாயக்க!

T

The Leader Desk

ஆகஸ்ட் 22, 2024 • 2:58 PM

உலக கிரிக்கெற் களத்தில்  தனித்துவமான உலக சாதனையை நிலைநாட்டிய இலங்கை வீரர் மிலான் ரத்நாயக்க!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மான்செஸ்டரில் நேற்று (21) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெற் போட்டியில் 41 வருடங்களாக உலக கிரிக்கட் களத்தில் ஒரு துடுப்பாட்ட வீரரால் புதுப்பிக்கப்படாத தனித்துவமான உலக சாதனையை இலங்கை வீரர் மிலான் ரத்நாயக்க புதுப்பித்துள்ளார்.
  • தனது அறிமுக டெஸ்ட் போட்டிக்கு பந்து வீச்சாளராக இலங்கை அணியில் இடம் ஒதுக்கிய மிலன், இந்தப் போட்டியில் 9ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்க பெறுமதியான 72 ஓட்டங்களைப் பெற்றார்.
  • எந்தவித ஆரவாரமும் இன்றி இன்னிங்ஸை கட்டியெழுப்பிய மிலான் 135 பந்துகளை எதிர்கொண்டதுடன் அவரது இன்னிங்ஸில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும்.
  • இங்கு மிலன் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா 8ஆவது விக்கெட்டுக்கு 63 ஓட்டங்களை இணைத்திருந்தார்.
எழுத்து அளவு:

மான்செஸ்டரில் நேற்று (21) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெற் போட்டியில் 41 வருடங்களாக உலக கிரிக்கட் களத்தில் ஒரு துடுப்பாட்ட வீரரால் புதுப்பிக்கப்படாத தனித்துவமான உலக சாதனையை இலங்கை வீரர் மிலான் ரத்நாயக்க புதுப்பித்துள்ளார்.

தனது அறிமுக டெஸ்ட் போட்டிக்கு பந்து வீச்சாளராக இலங்கை அணியில் இடம் ஒதுக்கிய மிலன், இந்தப் போட்டியில் 9ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்க பெறுமதியான 72 ஓட்டங்களைப் பெற்றார்.

எந்தவித ஆரவாரமும் இன்றி இன்னிங்ஸை கட்டியெழுப்பிய மிலான் 135 பந்துகளை எதிர்கொண்டதுடன் அவரது இன்னிங்ஸில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும்.

இங்கு மிலன் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா 8ஆவது விக்கெட்டுக்கு 63 ஓட்டங்களை இணைத்திருந்தார்.

மேலும், இலங்கை அணியின் ஸ்கோர் போர்டில் 176 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுகள் வீழ்ந்திருந்த நிலையில், 9ஆவது விக்கெட்டுக்காக விஸ்வ பெர்னாண்டோவுடன் இணைந்து 50 ஓட்டங்களை இணைத்திருந்தார், அதில் அவர் 42 ஓட்டங்களுக்கு பங்களித்தார்.

இலங்கைக்கான டெஸ்ட் அழைப்பை வென்ற 166ஆவது வீரராக சர்வதேச களத்தில் இறங்கிய மிலனின் இந்த இன்னிங்ஸ், அறிமுக டெஸ்ட் போட்டியில் 9 அல்லது அதற்கும் குறைவான நிலையில் இருந்து ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக கருதப்படுகிறது.

இதற்கு முன்பு 1983 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 71 ரன்கள் எடுத்த இந்திய வீரர் பல்விந்தர் சந்த் இந்த சாதனையை படைத்திருந்தார்.

வலது கை வேகப்பந்து வீச்சாளரான மிலன் இதற்கு முன் முதல் தர போட்டிகளில் 72 ரன்கள் எடுத்ததில்லை, மேலும் அவரது அதிகபட்ச முதல் தர இன்னிங்ஸ் 59 ஆகும், அவருக்கு இரண்டு அரை சதங்கள் மட்டுமே இருந்தன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

உலக கிரிக்கெற் களத்தில் தனித்துவமான உலக சாதனையை நிலைநாட்டிய இலங்கை வீரர் மிலான் ரத்நாயக்க! | Tamil Leader | We Lead the Nation