Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

வடக்கு, கிழக்கு இணைப்பில்லை: மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களும் இல்லை! நாமல் திட்டவட்டம்

T

The Leader Desk

ஆகஸ்ட் 22, 2024 • 11:01 AM

வடக்கு, கிழக்கு இணைப்பில்லை: மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களும் இல்லை! நாமல் திட்டவட்டம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டா என அதன் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
  • தன்னால் முடிந்ததை மட்டுமே அறிவிப்பதாகவும், செய்ய முடியாததை அறிவிப்பதில்லை என்றும் அவர் கூறினார்.
  • அநுராதபுரத்தில் இடம்பெற்ற தனது கன்னி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டா என அதன் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற தனது கன்னி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கப் போவதில்லை என நாமல் ராஜபக்க்ஷ வலியுறுத்தியுள்ளார்.

தன்னால் முடிந்ததை மட்டுமே அறிவிப்பதாகவும், செய்ய முடியாததை அறிவிப்பதில்லை என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் வடக்கையும் கிழக்கையும் இணைக்காது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

பௌத்த நாட்டில் அனைத்து மதங்களையும் மொழிகளையும், மக்களையும் பாதுகாப்பதாக உறுதியளிப்பதாக நாமல் ராஜபக்க்ஷ வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், சவால்களுக்கு தாம் அஞ்சப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...