பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் வகுப்பறையை சுத்தம் செய்யாத காரணத்தினால் 12 வயதுடைய மாணவன் ஒருவரை தாக்கியதாகவும் இதனால் மாணவனின் கழுத்தில் இரண்டு எலும்புகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் அவரது தாயார் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார் என ஹம்பாந்தோட்டை மனித உரிமைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
வகுப்பறையைச் சுத்தம் செய்யாத மாணவனைத் தாக்கி கழுத்து எலும்புகளை சேதப்படுத்திய அதிபர்!
T
The Leader Desk
ஆகஸ்ட் 22, 2024 • 7:01 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வகுப்பறையைச் சுத்தம் செய்யாமைக்காக இவ்வாறு மாணவன் ஒருவனை அதிபர் அடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும் என மனித உரிமைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
- இதேபோன்று இந்தச் சம்பவத்தில் பொலிஸாரும் பாரபட்சமாக நடந்து கொண்டதாகவும் அம்பாந்தோட்டை மனித உரிமைகள் நிலையத்தின் இணைப்பாளர் தரங்கா எல்.
- பாதிக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மாணவனுக்கு எந்தவித பாதிப்பு அறிகுறியும் இல்லை என்றும், மாணவன் கடும் மன அழுத்தத்துக்கு மட்டுமே உள்ளாகியிருப்பதாக தடயவியல் மருத்துவர் அளித்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
வகுப்பறையைச் சுத்தம் செய்யாமைக்காக இவ்வாறு மாணவன் ஒருவனை அதிபர் அடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும் என மனித உரிமைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மாணவனுக்கு எந்தவித பாதிப்பு அறிகுறியும் இல்லை என்றும், மாணவன் கடும் மன அழுத்தத்துக்கு மட்டுமே உள்ளாகியிருப்பதாக தடயவியல் மருத்துவர் அளித்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இந்தச் சம்பவத்தில் பொலிஸாரும் பாரபட்சமாக நடந்து கொண்டதாகவும் அம்பாந்தோட்டை மனித உரிமைகள் நிலையத்தின் இணைப்பாளர் தரங்கா எல். பட்டபெத்தி மேலும் கூறினார்.
இதேவேளை, அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான தனது மகன் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக மாணவனின் தாய் தெரிவித்துள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

