Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கைகலப்பில் ஈடுபட்ட பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் அலியார் இடைநிறுத்தம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 22, 2024 • 6:09 AM

கைகலப்பில் ஈடுபட்ட பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் அலியார் இடைநிறுத்தம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்துடன் தொடர்புடைய கட்சியின் பாலமுனை பிரதேச அமைப்பாளர் ஏ.எல்.எம்.
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடந்த 11 ஆம் திகதி அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு சக்கி மண்டபத்தில் நடைபெற்றது.
  • கபூர் மற்றும் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர் ஆகியோர் அடங்கிய குழுவொன்றை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உடனடியாக நியமித்திருந்தார்.
எழுத்து அளவு:

கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்துடன் தொடர்புடைய கட்சியின் பாலமுனை பிரதேச அமைப்பாளர் ஏ.எல்.எம். அலியார் கட்சியின் மாவட்ட செயற்குழு மற்றும் உயர்பீட உறுப்பினர் பதவிகளிலிருந்து இரு வார காலத்துக்கு  இடைநிறுத்தப்பட்டுள்ளார் என கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடந்த 11 ஆம் திகதி அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு சக்கி மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டம் நிறைவுற்று தலைவர் மண்டபத்தில் இருந்து வெளியேறிய பின்னர் கட்சியின் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி குழப்பகரமான சூழல் ஏற்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக கட்சியின் தவிசாளர் ஏ. எல். அப்துல் மஜீத், பிரதித் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் மற்றும் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர் ஆகியோர் அடங்கிய குழுவொன்றை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உடனடியாக நியமித்திருந்தார்.

கட்சியின் தவிசாளர் ஏ. எல். அப்துல் மஜீத், பிரதித் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் ஆகிய இருவரும் கூட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து நெரிசல் காரணமாக ஏனையோர் மண்டபத்தில் இருந்து வெளியேரும் வரை காத்திருத்த வேளையில் அப்போது மண்டபத்துக்குள் நடந்த விடயங்களை நேரடியாக அவதானித்திருந்தனர். அதற்கு மேலதிகமாக சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதனடிப்படையில்  கட்சி தலைமையிடம் இக்குழு முன்வைத்த பரிந்துரைக்கமைவாக தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் கட்சியின் பாலமுனை பிரதேச அமைப்பாளர் ஏ.எல்.எம். அலியார், இரண்டு வார காலத்துக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு மற்றும் உயர்பீட உறுப்பினர் பதவிகளில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்த பட்டிருப்பதாக கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...