Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

நீர்கொழும்பு காதி நீதிவானுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது!

T

The Leader Desk

ஆகஸ்ட் 21, 2024 • 4:11 AM

நீர்கொழும்பு காதி நீதிவானுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலஞ்சம் வழங்க முற்பட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைகுழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
  • சந்தேக நபரை கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்தபோது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். சிலாபத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இலஞ்சம் வழங்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டவராவார்.
  • இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதி சந்தேக நபர் மீண்டும் நீதவானின் அலுவலகத்துக்கு வந்து 5000 ரூபா பணத்தை நீதிவானின் மேசை இலாச்சியில் வைத்துள்ளார்.
  • இந்நிலையில் 14 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்ட போது , எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எழுத்து அளவு:
இலஞ்சம் வழங்க முற்பட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைகுழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
 
சந்தேக நபரை கொழும்பு  நீதிமன்றில் ஆஜர் செய்தபோது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 
 
சிலாபத்தை சேர்ந்த 34 வயதுடைய  நபரே  இலஞ்சம் வழங்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டவராவார்.
 
சந்தேக நபர் நீர்கொழும்பு காதி நீதவான் எம்.எம். முஹாஜிரினின் வீட்டில்  அமைந்துள்ள அலுவலகத்துக்கு  வந்து, தான் தொடர்ந்துள்ள மனைவியுடனான விவாகரத்து வழக்கை விரைவில் முடித்து, விவகாரத்து  (தலாக்) வழங்குமாறு கூறி, 5000 ரூபா பணத்தை நீதிவானின் மேசையில் வைத்துள்ளார். 
 
சந்தேக நபர் இதற்கு முன்னர் இரண்டு தடவை இலஞ்சம் வழங்க முயற்சித்தபோது காதி நீதிவான் சந்தேக நபரை எச்சரித்து, அறிவுரை கூறி திருப்பி அனுப்பியுள்ளார்.
 
இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதி  சந்தேக நபர் மீண்டும் நீதவானின் அலுவலகத்துக்கு வந்து 5000 ரூபா பணத்தை நீதிவானின் மேசை இலாச்சியில்  வைத்துள்ளார். இதன்போது  இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
 
இந்நிலையில் 14 ஆம் திகதி  கொழும்பு நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்ட போது , எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
காதி நீதிவான் எம்.எம். முஹாஜிரின் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நீர்கொழும்பு நகரில் பணியாற்றி வருகிறார்.  இவர் அக்குறணையை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வாசிப்பிடமாகவும் கொண்டவராவார். தனது கடமைக்கு மேலதிகமாக கம்பஹா காதிநீதிமன்றத்தில் பதில் காதி நீதிவானாக இரண்டரை வருட காலம் பணியாற்றியுள்ளார். தற்போது புத்தளம் பதில் காதி நீதிவானாகவும் கடந்த ஐந்து மாதங்களாக பணியாற்றி வருகிறார்.
 
காதி நீதிவான் எம்.எம். முஹாஜிரின் கொழும்பு இஹ்ஸானியா அரபிக் கல்லூரியின் பழைய மாணவரும், அந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமாவார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...