Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சஜித்தின் கொழும்புக் கூட்டம் ' கொட்டஉட'!

T

The Leader Desk

ஆகஸ்ட் 19, 2024 • 7:49 AM

சஜித்தின் கொழும்புக் கூட்டம் ' கொட்டஉட'!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுகாதார நிபுணத்துவப் படையின் பொது மாநாடு நேற்று (18) கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் இருபது சுகாதார நிபுணர்கள் மாத்திரமே பங்குபற்றியமையால் மாநாட்டை நடத்த முடியவில்லை.
  • இதன் காரணமாக கொழும்பில நடைபெறவிருந்த இந்த மாநாட்டை காலை 10.30 மணி வரையில் போதியளவு மக்கள் கலந்து கொள்ளாததால் ஒத்திவைக்க ஐக்கிய மக்கள் சக்தியின்தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்தார்.
  • டாக்டர்கள், தாதியர்கள் மற்றும் பிற சுகாதார வல்லுநர்கள் உட்பட சுமார் 2,000 சுகாதார வல்லுநர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 22 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
  • ஆனால் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க அவர் தீர்மானித்த நிலையில், இந்த மாநாட்டை ஏற்பாடு செய்யும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

சுகாதார நிபுணத்துவப் படையின் பொது மாநாடு நேற்று (18) கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் இருபது சுகாதார நிபுணர்கள் மாத்திரமே பங்குபற்றியமையால் மாநாட்டை நடத்த முடியவில்லை.

இதன் காரணமாக கொழும்பில நடைபெறவிருந்த இந்த மாநாட்டை காலை 10.30 மணி வரையில் போதியளவு மக்கள் கலந்து கொள்ளாததால் ஒத்திவைக்க ஐக்கிய மக்கள் சக்தியின்தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்தார்.

டாக்டர்கள், தாதியர்கள் மற்றும் பிற சுகாதார வல்லுநர்கள் உட்பட சுமார் 2,000 சுகாதார வல்லுநர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் 22 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் சுகாதாரத் துறையின் கூட்டங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க அவர் தீர்மானித்த நிலையில், இந்த மாநாட்டை ஏற்பாடு செய்யும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவிடம் கேட்ட போது, ​​தவிர்க்க முடியாத காரணத்தினால் மாநாட்டை ஒத்திவைக்க நேரிட்டதாக தெரிவித்தார்.

மாநாட்டில் பங்குபற்றய வருகை தந்தவர்களின் எண்ணிக்கை குறைவினால் கூட்டத்தை  நடக்கவில்லை எனவும், மீண்டும் மாநாட்டை நடத்துவதற்கான திகதி குறித்து அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என சுகாதார நிபுணர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...