Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

மீராவோடையில் திருடன் பார்த்த வேலையால் தீயில் நாசமான பொருட்கள்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 19, 2024 • 6:56 AM

மீராவோடையில் திருடன் பார்த்த வேலையால் தீயில் நாசமான பொருட்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உட்பட்ட மீராவோடையிலுள்ள வீடொன்று தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  • இந்தச் சம்பவம் இன்று (19) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
  • ஓட்டமாவடி - மீராவோடை - 4 ஆம் வட்டாரம் நூரானியா வீதியிலுள்ள வீடொன்றே இவ்வாறு பகுதியளவில் தீப்பற்றியுள்ளது.
  • இந்தச் தீப்பரவல் திருடன் ஒருவனால் ஏற்பட்டுள்ளதாக வீட்டினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:
உட்பட்ட மீராவோடையிலுள்ள வீடொன்று தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்தச் சம்பவம் இன்று (19) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
வீட்டிலுள்ளோர்  உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீடு  தீப்பற்றியதைக் கண்டு கூக்குரல் இட்டதைத் தொடர்ந்து அயலவர்கள் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
 
ஓட்டமாவடி - மீராவோடை - 4 ஆம் வட்டாரம் நூரானியா வீதியிலுள்ள வீடொன்றே இவ்வாறு பகுதியளவில் தீப்பற்றியுள்ளது.
 
IMG 20240819 122240 800 x 533 pixel
 
தீப்பரவலை அணைக்கச் சென்ற நபர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டிலுள்ள மின்சாரப் பொருட்கள், தளபாடங்கள் பல தீயில் கருகியுள்ளன.
 
இந்தச் தீப்பரவல் திருடன் ஒருவனால் ஏற்பட்டுள்ளதாக வீட்டினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
 
குறித்த வீட்டில் திருடன் ஒருவன் ஜன்னல் வழியாக புகுந்து அங்கிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளான்.
 
இந்நிலையில், சம்பவ தினம் திருடன் ஒருவன்  வீட்டின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பொலித்தீன் வழியாக உட்செல்ல முயற்சித்து அதற்கு தீ வைத்ததில் இந்தச் சம்பம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
 
அத்துடன்,  தீ பிடிப்பதை கண்டு வீட்டார் எழுந்த போது வீட்டிலிருந்து திருடன் ஓடிச் சென்றதை கண்டுள்ளனர்.
 
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...