Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

வாக்களித்தது போல உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மை நிலையை வெளிப்படுத்துவோம்! -சஜித் பிரேமதாச (வீடியோ)

T

The Leader Desk

ஆகஸ்ட் 18, 2024 • 12:47 PM

வாக்களித்தது போல உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மை நிலையை வெளிப்படுத்துவோம்! -சஜித் பிரேமதாச (வீடியோ)

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பாக மக்கள் எதிர்பார்த்துள்ளது போல உண்மை தன்மையை வெளிக்கொணர்வதற்கு தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் அனைவரும் தயாராக இருக்கிறோம்.
  • எனவே இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு, கா்தினல் உள்ளிட்ட கத்தோலிக்க பேரவைக்கு எங்கனமும் தெளிவுபடுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
  • இதற்கான தெளிவான வேலை திட்டங்கள் என்னிடம் இருக்கின்றன. இது தொடர்பான விடயங்கள் பாராளுமன்றத்தில் கூட சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

தொடர்பாக மக்கள் எதிர்பார்த்துள்ளது போல உண்மை தன்மையை வெளிக்கொணர்வதற்கு தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியின்  அனைவரும் தயாராக  இருக்கிறோம். இதற்கான தெளிவான வேலை திட்டங்கள் என்னிடம் இருக்கின்றன.  இது தொடர்பான விடயங்கள்  பாராளுமன்றத்தில் கூட   சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று  எதிர்க்கட்சித் தலைவர்  தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையோடு  இடம் பெற்றதா என்பது குறித்தே இந்த நாட்டில் உள்ள  கத்தோலிக்கர்களுக்கும்  ஒட்டுமொத்த நாட்டு  மக்களும் எதிர்பார்த்திருக்கின்றனர்.  இதன் உண்மைத்தன்மை  வெளிப்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் சிக்கல் காணப்படுகின்றன. எனவே  இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு, கா்தினல் உள்ளிட்ட கத்தோலிக்க பேரவைக்கு எங்கனமும் தெளிவுபடுத்துவோம் என்று  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
 
அவ்வாறே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பின்னணி  மற்றும் அதன் உண்மைத்தன்மை  என்பனவற்றை எந்தவித பேதமும் இன்றி கண்டறிந்து,  அதனுடன் தொடர்புடைய  அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய  அதிகபட்ச தண்டனையை  பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும்  எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது வாக்குறுதியளித்தார். 
 
IMG 20240818 WA0195
 
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக ஆசிகளை பெற்றுக் கொள்ளும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பு ஆயர் இல்லத்திற்கு இன்று(18) விஜயம் செய்தார். 
 
இங்கு, பேரருட்திரு மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, அருட்திரு மெக்ஸ்வெல் சில்வா, அருட்திரு ஜே.டி. அந்தனி ஜயகொடி, அருட்திரு அன்டன் ரஞ்சித், அருட்திரு சிறில் காமினி மற்றும் அருட்திரு இந்திக ஜோய் ஆகியோரைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஆசிகளைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...