Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

இ.தொ.காவின் ஆதரவு ரணிலுக்கு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 18, 2024 • 12:27 PM

இ.தொ.காவின் ஆதரவு ரணிலுக்கு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் மலையக மக்கள் தொடர்பான அவரின் அக்கறை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.
  • இன்று (18.07.2024) கொட்டகலையில் தேசிய சபை கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். ஜீவன் தொண்டமான் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து ஜனாதிபதி மீட்டுள்ளார்.
  • செந்தில் தொண்டமான் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனநாயக முறைப்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.
எழுத்து அளவு:

ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் மலையக மக்கள் தொடர்பான அவரின் அக்கறை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இன்று (18.07.2024) கொட்டகலையில் தேசிய சபை கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். 

ஜீவன் தொண்டமான்

நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து ஜனாதிபதி மீட்டுள்ளார். கடந்த இரு வருடங்களில் பல வேலைத்திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல மலையக மக்களின் வாழ்வாதார மேம்பாடு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுத்துள்ளார். சம்பள பிரச்சினை தொடர்பிலும் அதிக அக்கறையுடன் செயற்பட்டார். தேசிய சபையில் எடுக்கப்பட்ட முடிவு ஜனாதிபதிக்கு தொலைபேசி வாயிலாக அறிவிக்கப்பட்டது. மலையக மக்கள் தனது பக்கம் நிற்பது பலம் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

செந்தில் தொண்டமான்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனநாயக முறைப்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் முடிவை பெரும்பாலான உறுப்பினர்கள் தெரியப்படுத்தினர். கட்சி தலைமை என்ற அடிப்படையில் அதனை நாம் ஏற்றுள்ளோம். தேசிய சபைக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். இவை சம்பந்தமாக ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும். 

ராமேஸ்வரன்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு முடிவெடுத்தோம். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். அவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். ஜனாதிபதியின் ஆட்சியின்கீழ் அடுத்த ஐந்தாண்டுகளில் மலையகத்தில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...