Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

விவசாயத்துறை எமது நாட்டுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்காது என ஜனாதிபதி கூறினார்! -சஜித் பிரேமதாச

T

The Leader Desk

ஆகஸ்ட் 18, 2024 • 6:34 AM

விவசாயத்துறை எமது நாட்டுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்காது என ஜனாதிபதி கூறினார்! -சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பல தடவைகள் பாராளுமன்றத்தில் நான் உட்பட ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளோம்.
  • ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் மூன்றாவது வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தலைமையில் நேற்று (17) மாத்தறை அகுரஸ்ஸ நகரில் மிக சிறப்பான முறையில் இடம்பெற்றது.
  • இதில் ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் போலவே பெருந்திரளான பிரதேச மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
எழுத்து அளவு:

மக்கள்   துன்பப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்  பல தடவைகள் பாராளுமன்றத்தில் நான் உட்பட ஐக்கிய மக்கள் கூட்டணியின்  பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக  கருத்து வெளியிட்டுள்ளோம்.

அரசாங்கம் அதனை ஒரு சதத்திற்கேனும் கருத்தில் கொள்ளவில்லை. இது தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை நியமித்த நிலையில் நட்ட ஈடு கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு  நட்டை ஈடு வழங்குமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தபோது, அந்தப் பிரதேசத்தில் உள்ள  பத்தாயிரம் ஏக்கர் வயல் காணிகளை  அரசாங்கத்துக்கு கையகப்படுத்துவதற்கு  தற்போதைய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

பத்தாயிரம் ஏக்கர்  வயல் காணிகளை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொண்டு வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த  அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் தான் பிரதித் தலைவராக இருந்தபோது ஒருதடவை “விவசாயத்துறை எமது நாட்டுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்காது” என்று தற்போதைய ஜனாதிபதி கூறினார்.

அவருக்கு விவசாயத்துறை பெறுமதி இல்லாமல் இருந்தாலும் எமக்கு விவசாயமும்  விவசாயிகளும் பெறுமதியானவர்கள்.  நில்வளா திட்டத்தின் ஊடாக நில்வளா கங்கையின் மேலதிக நீரை வறண்ட பிரதேசங்களுக்கு கொண்டு செல்வதும்,  நீர் பெருக்கெடுப்பின் ஊடாக அனர்த்தங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்கி அந்த மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின்  தீர்வாக அமையும் என  எதிர்க்கட்சித் தலைவர்  இதன் போது குறிப்பிட்டார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் மூன்றாவது வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தலைமையில் நேற்று (17) மாத்தறை அகுரஸ்ஸ நகரில் மிக சிறப்பான முறையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதில் ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் போலவே பெருந்திரளான பிரதேச மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போதுவரை தேயிலை தொழிற்சாலைகள்  பாரிய நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளது. இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக தேயிலை உற்பத்தியில்விவசாயிகளுக்கு  சலுகைகள் வழங்கப்படும். விவசாயத் துறைக்கு உயர் தரத்திலான உள்ளீடுகளை வழங்குவதற்கும் தாம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

அதேபோன்று கறுவா உற்பத்தியில்  எதிர்பார்க்கப்பட்ட பிரதிபலனை இதுவரை எட்ட முடியாது இருந்திருக்கிறது. எனவே அதற்கு பொருத்தமான துறையை அறிமுகப்படுத்தி ஏற்றுமதி சந்தையில் சிறந்த இடத்தை பெற்றுக் கொள்ள முடியும்.  ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜப்பானுக்கும்  ஏற்றுமதி செய்யக்கூடிய கருவா வகைகளை உற்பத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார். 

sajith akurassa

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...