Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கண்டி மாவட்ட துரோகிக்கு தக்க பாடம் புகட்டுவோம்! - திகாம்பரம் சூளுரை

T

The Leader Desk

ஆகஸ்ட் 17, 2024 • 12:13 PM

கண்டி மாவட்ட துரோகிக்கு தக்க பாடம் புகட்டுவோம்! - திகாம்பரம் சூளுரை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியை சேர்ந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான அமைப்பாளர்களை கினிகத்தேனையில் வைத்து இன்று (17) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • இவ்வாறான நிலையிலேயே கண்டி மாவட்ட தமிழ் மக்கள் நிச்சயமாக சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களிக்க தயார் நிலையில் இருக்கின்றார்கள்.
  • அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு யார் துரோகம் செய்தாலும் அதனை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எழுத்து அளவு:

கூட்டணியின் வாக்குகளை எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு பெருவாரியாக பெற்றுக் கொடுப்போம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியை சேர்ந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான அமைப்பாளர்களை கினிகத்தேனையில் வைத்து இன்று (17) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு யார் துரோகம் செய்தாலும் அதனை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வருகின்ற தேர்தல்களில் துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தை காட்டுவார்கள். அத்தோடு, கண்டி மாவட்டத்தில் இருக்கின்ற எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் வாக்காளர்கள் எந்தவகையிலும் தமது மனதிடத்தை இழக்காமல் தொடர்ந்தும் அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுப்பட வேண்டும்.

அதற்கு நான் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணியுடைய தலைவர்கள் உறுதுணையாக இருப்போம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே கண்டி மாவட்ட தமிழ் மக்கள் நிச்சயமாக சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களிக்க தயார் நிலையில் இருக்கின்றார்கள்.

ஆகவே, கண்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்ச்சியான கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஆரம்ப கட்டமாகவே அமைப்பாளர்களாகிய உங்களை சந்தித்து இருக்கின்றேன். அடுத்த கட்ட நடவடிக்கைகளில் நாங்கள் தீவிரமாக ஈடுப்பட இருக்கின்றோம்.

எதிர்வரும் புதிய அரசாங்கத்தில் நாங்கள் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டு கண்டி மாவட்டத்தில் உள்ள தோட்டப்பகுதி உட்பட எல்லா பிரதேசத்திலும் இடை நிறுத்தப்பட்டிருக்க அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்வதற்கு தயாரான நிலையில் இருக்கின்றோம்.

எனவே, எமக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் தகுந்த பாடத்தை புகட்டுவோம் என்று பழனி திகாம்பரம் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...