Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

மைத்திரியின் ஆதரவு எமக்குத் தேவையில்லை! -ஐக்கிய மக்கள் சக்தி

T

The Leader Desk

ஆகஸ்ட் 16, 2024 • 11:41 AM

மைத்திரியின் ஆதரவு எமக்குத் தேவையில்லை! -ஐக்கிய மக்கள் சக்தி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிறிசேன ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.
  • ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அவர் விடுத்துள்ள அறிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதியுடன் கூட்டு சேர்வதற்கோ அல்லது அவ்வாறான ஆதரவைப் பெறுவதற்கோ ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
  • இத்தேர்தல் காலத்தில் அனைத்துக் கட்சிகளுக்கும் சவாலாக விளங்கும் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக அரசாங்கத்தின் ஊடகச் செயற்பாடுகள் மற்றும் அனைத்து வேட்பாளர்களும் டீல் அரசியலில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.
எழுத்து அளவு:

சிறிசேன ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ். எம். மரிக்கார் கூறுகிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அவர் விடுத்துள்ள அறிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதியுடன் கூட்டு சேர்வதற்கோ அல்லது அவ்வாறான ஆதரவைப் பெறுவதற்கோ ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமான தோல்வியை எதிர்நோக்கியுள்ள  அரசாங்கத்துக்கு ஆதரவான பிரசாரக் குழுக்கள் பொய்யான செய்திகளை உருவாக்கி அதனை வெகுஜன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் வலியுறுத்துகின்றார்.

இத்தேர்தல் காலத்தில் அனைத்துக் கட்சிகளுக்கும் சவாலாக விளங்கும் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக அரசாங்கத்தின் ஊடகச் செயற்பாடுகள் மற்றும் அனைத்து வேட்பாளர்களும் டீல் அரசியலில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...