Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

அதளபாதாளத்திலேயே நாட்டின் நிலைமை காணப்படுகிறது! -சஜித் பிரேமதாஸ

T

The Leader Desk

ஆகஸ்ட் 16, 2024 • 9:03 AM

அதளபாதாளத்திலேயே நாட்டின் நிலைமை காணப்படுகிறது! -சஜித் பிரேமதாஸ

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இருப்பதாக ஜானாதிபதி கூறினாலும் நாட்டில் உருவாகியிருப்பது புதியதொரு இயல்பு நிலையாகும்.
  • இது தொடர்பில் பல்வேறுபட்ட முட்டாள்தனமான, நாட்டு மக்களை ஏமாற்றும் கருத்துகளை முன்வைப்பவர்களுக்கு, நாம் பதிலளிக்க மாட்டோம் என்றும் இதன்போது எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
  • வாரிசு முறையில் அன்றி , 220 இலட்சம் மக்களின் வாக்குகளால் தான் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.
  • சர்வ மதத் தலைவர்களும் கூறும் சிறந்த அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு, நாகரீகமான நாட்டைக் கட்டியெழுப்புவேன். பல ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, 220 இலட்சம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தான் வழங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

இருப்பதாக ஜானாதிபதி  கூறினாலும் நாட்டில் உருவாகியிருப்பது புதியதொரு  இயல்பு நிலையாகும். இதனால் நாட்டு மக்கள்  தொழில்களை இழந்து, ஜீவனோபாயத்தை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதன் காரணமாக மக்கள் பெரும் கவலையில் உள்ளனர். மக்களின் நுகர்வு, முதலீடு, சேமிப்பு மற்றும் உற்பத்தி ஆகியவை இல்லாமால் போயுள்ள காரணத்தினால் நாட்டின் ஏற்றுமதி பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இக்காரணத்தால் நாட்டின் புதியதொரு இயல்புநிலை உருவாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களின் வாழ்வாதாரத்தை குறைத்து , பணத்தைச் சட்டைப் பைகளில் அடைத்து, செலவழிக்க முடியாதொரு நிலை உருவாகியுள்ளது. நாட்டை நாசமாக்கி, அதளபாதாளத்துக்கு கொண்டு சென்றுள்ள  ஒரு சாதாரண நிலையே நாட்டில் நிலவி வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்கள் தெரிவித்தார்.
 
கண்டி மல்வத்த மற்றும் அஸ்கிரி பீட மகா நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பிற்பாடு   ஊடகங்களுக்கு கருத்துத்  தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
நாட்டு மக்களின் தோள்களில் சுமக்க முடியாத அளவுக்கு சுமை ஏற்றப்பட்டு, இயல்புநிலை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பல்வேறுபட்ட முட்டாள்தனமான, நாட்டு மக்களை ஏமாற்றும் கருத்துகளை முன்வைப்பவர்களுக்கு, நாம் பதிலளிக்க மாட்டோம் என்றும் இதன்போது எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
 
மேலும் பார் உரிமம் வழங்குதல், ஏலம் மற்றும் மானியம் வழங்குதல் போன்ற கலாச்சாரங்கள்  எம்மிடம் இல்லை. வாரிசு முறையில் அன்றி , 220 இலட்சம் மக்களின் வாக்குகளால் தான் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மதுபானம் இல்லாத யுகமொன்றை உருவாக்க முயற்சிப்போம். அரசியல் சூதாட்ட முற்றாக நிறுத்தப்படும் என்றும் எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
 
பொருளாதார மறுசீரமைப்பு என்று மக்கள் மீது எல்லையற்ற சுமைகளை சுமத்தி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
 
மக்களை துன்பத்திலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
 
துன்பப்படும் நாட்டு மக்களை, துன்பங்களில் இருந்து விடுவித்து, நாட்டை அபிவிருத்தி செய்யும் அனைவருக்கும் சுபிட்சம் தரும் உயர்ந்த கலாச்சாரமும், நாகரீகமான சட்ட ஒழுங்கும் கொண்ட ஒரு நாடு உருவாக்குவோம் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
 
சர்வ மதத் தலைவர்களும் கூறும் சிறந்த அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு, நாகரீகமான நாட்டைக் கட்டியெழுப்புவேன்.  பல ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, 220 இலட்சம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தான் வழங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...