Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சஜித்துக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தால் விஜயதாச ராஜபக்‌ஷ பிரசாரத்தில் ஈடுபடமாட்டார்?

T

The Leader Desk

ஆகஸ்ட் 16, 2024 • 7:03 AM

சஜித்துக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தால் விஜயதாச ராஜபக்‌ஷ பிரசாரத்தில் ஈடுபடமாட்டார்?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • பின்னர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தம் சிறிசேனா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆசன அமைப்பாளர்களை கொழும்புக்கு அழைத்து கலந்துரையாடி அங்கு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
  • மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை தொகுதி முக்கியஸ்தர்களை அண்மையில் கூட்டி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என வினவியபோது அங்கு ஏகமனதாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதித் தேர்தலில்  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை தொகுதி  முக்கியஸ்தர்களை அண்மையில் கூட்டி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என வினவியபோது அங்கு ஏகமனதாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தம் சிறிசேனா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆசன அமைப்பாளர்களை கொழும்புக்கு அழைத்து கலந்துரையாடி அங்கு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த இரு கலந்துரையாடல்களிலும் விஜேதாச ராஜபக்க்ஷ ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமாட்டார் எனவும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் தயாசிறி ஜயசேகரவின் செயலாளர் பதவிக்கு இருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து அக்கட்சியின் அமைப்பாளர்கள் பலர் ஒன்றிணைந்து அவருடன் இணைந்து செயற்படுவதுடன் அவர்களும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக தயாசிறி ஜயசேகரவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...