Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ரணிலுக்கு ஆதரவளித்தவர்கள் மீது பொதுஜன பெரமுன கடுமையான நடவடிக்கை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 16, 2024 • 4:38 AM

ரணிலுக்கு  ஆதரவளித்தவர்கள் மீது பொதுஜன பெரமுன கடுமையான நடவடிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கட்சியின் நிலைப்பாட்டை எதிர்க்கும் உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் அரசியல் பீடம் கடந்த சில வாரங்களாக கணிசமான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்சியின் அணுகுமுறை குறித்து ஆலோசிக்க அண்மையில் பொதுஜன பெரமுனவின் அரசியல் பீடம் கூடியது.
எழுத்து அளவு:

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை தெரிவிக்கும் கடிதங்கள் கூடிய விரைவில் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்ததன் பின்னர் கட்சியின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்துச் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்சியின் அணுகுமுறை குறித்து ஆலோசிக்க அண்மையில் பொதுஜன பெரமுனவின் அரசியல் பீடம் கூடியது. இக்கூட்டத்தின்போது கட்சியில் இருந்து வேட்பாளரை நியமிப்பது என்றும் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களின் அங்கத்துவத்தை இடைநிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கட்சியின் நிலைப்பாட்டை எதிர்க்கும் உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் அரசியல் பீடம் கடந்த சில வாரங்களாக கணிசமான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்யுமாறு கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கோரியிருந்தனர்.

இதன்படி, கட்சியின் தீர்மானங்களை மீறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான கடிதங்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...