Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சமூக வலைதளங்களில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முயற்சிக்கும் ஜனாதிபதி ரணில்; இலங்கை நீதிக்கான மய்யம் தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 14, 2024 • 8:50 AM

சமூக வலைதளங்களில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முயற்சிக்கும் ஜனாதிபதி ரணில்;  இலங்கை  நீதிக்கான மய்யம் தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவ்வாறான View, Comment , Like என்பன போலி முகநூல் கணக்குகளை கொண்டு உருவாக்கப்படுகின்றன.
எழுத்து அளவு:
போட்டியிடவுள்ள தற்போதைய ஜனாதிபதியின உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக இலங்கை  நீதிக்கான மய்யம் தேர்தல் ஆணையத்துக்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது. 
 
குறித்த முறைப்பாட்டில் ஜனாதிபதியின் உத்தியோபூர்வ முகநூல் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முகப்புத்தக இடுக்கைகளுக்கான 
(post )  View, Comment , Like  போன்றவற்றை செயற்கையான முறையில் அதிகரிக்க  போட்கள் (bots) ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இவ்வாறான View, Comment , Like  என்பன போலி முகநூல் கணக்குகளை  கொண்டு உருவாக்கப்படுகின்றன. இச் செயற்பாடானது  வாக்காளர் மத்தியில் குறித்த ஜனாதிபதி வேட்பாளருக்கு அதிகமான ஆதரவு இருப்பதாக ஒரு தவறான புரிதலை ஏற்படுத்துவதால் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை  நீதிக்கான மய்யம் தேர்தல் ஆணையத்தை கோரி உள்ளது. 
 
செயற்கை நுண்ணறிவை இவ்வாறு பயன்படுத்துவது பேஸ்புக் நிறுவனத்தின் சமூக தரநிலைகள்(Community Standards) மற்றும் இலங்கை ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் ஏற்பாடுகளை மீறுவதாகவும் அமைந்துள்ளதாக இலங்கை  நீதிக்கான மய்யம் சுட்டிக்காட்டி உள்ளது. 
 
இவ்வாறான செயற்பாடுகள் ஒரு சிறந்த நியாயமான தேர்தல் ஒன்றை இந் நாட்டு மக்கள் சந்திப்பதற்கும் தங்களுக்கு விரும்பிய வேட்பாளரை தேர்வு செய்வதற்கான உரிமையை மட்டுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என இலங்கை  நீதிக்கான மய்யம் குறித்த முறைப்பாட்டில்  கூறியுள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சமூக வலைதளங்களில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முயற்சிக்கும் ஜனாதிபதி ரணில்; இலங்கை நீதிக்கான மய்யம் தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு! | Tamil Leader | We Lead the Nation