Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் சஜித்துடன் ஒப்பந்தம்

T

The Leader Desk

ஆகஸ்ட் 13, 2024 • 2:32 PM

பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள்  சஜித்துடன் ஒப்பந்தம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளன.
  • குறித்த கட்சிகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று (13) கைச்சாத்திடப்பட்டது.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தலைமையிலான மனிதநேய மக்கள் கூட்டணியில் பதிவு செய்யப்பட்ட 03 அரசியல் கட்சிகளும் 27 சிவில் அமைப்புகளும் கைச்சாத்திட்டன.
  • அரசியலமைப்பில் காணப்படும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை, அவ்வாறே அமுல்படுத்த வேண்டும் எனவும் மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தான் முன்வைத்ததாக பிரபா கணேசன் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளன.

குறித்த கட்சிகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று  (13) கைச்சாத்திடப்பட்டது.
 
IMG 20240813 194716 800 x 533 pixel
 
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தலைமையிலான மனிதநேய மக்கள் கூட்டணியில் பதிவு செய்யப்பட்ட 03 அரசியல் கட்சிகளும் 27 சிவில் அமைப்புகளும் கைச்சாத்திட்டன.
 
அரசியலமைப்பில் காணப்படும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை, அவ்வாறே அமுல்படுத்த வேண்டும் எனவும் மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தான் முன்வைத்ததாக பிரபா கணேசன் கூறியுள்ளார்.
 
IMG 20240629 135905 800 x 533 pixel
 
மேலும் கொழும்பில் வாழும் தமிழர்களுக்கான வீட்டு உரிமை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுடன் ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்குவதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...