Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சம்மாந்துறையில் நகை திருடிய பெண் அம்பாறையில் கைது!

T

The Leader Desk

ஆகஸ்ட் 12, 2024 • 10:49 AM

சம்மாந்துறையில் நகை திருடிய பெண் அம்பாறையில் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நகை திருடப்பட்டமை தொடர்பில் நகைக்கடை உரிமையாளர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த புதன்கிழமை (7) முறைப்பாடு செய்திருந்தார்.
  • அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விளினியடி பௌசியா மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றிலேயே கடந்த புதன்கிழமை (7) நகை திருடப்பட்டிருந்தது.
  • குறித்த முறைப்பாட்டுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்திவின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டிருந்தனர்.
  • இதன் போது சம்மாந்துறை பெருங்குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் அம்பாறை பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (11) குறித்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரான அம்பாறை ஹிங்குரான பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணை திருடப்பட்ட நகைகளுடன் கைது செய்தனர்.
எழுத்து அளவு:

நகை திருடப்பட்டமை தொடர்பில் நகைக்கடை உரிமையாளர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த புதன்கிழமை (7)  முறைப்பாடு செய்திருந்தார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விளினியடி பௌசியா மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றிலேயே  கடந்த புதன்கிழமை (7)  நகை திருடப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டுக்கமைய   சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்திவின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ்  குழுவினர்  விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது   சம்மாந்துறை பெருங்குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் அம்பாறை பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில்   ஞாயிற்றுக்கிழமை (11) குறித்த  திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரான அம்பாறை ஹிங்குரான பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணை   திருடப்பட்ட நகைகளுடன் கைது செய்தனர்.

மேலும் குறித்த சந்தேக நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் தெரிந்தால் 0672 260 222 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கும்படி பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...