Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை எனக் கூறி ஒதுங்கிய சந்திரிகா!

T

The Leader Desk

ஆகஸ்ட் 12, 2024 • 3:57 AM

யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை எனக் கூறி ஒதுங்கிய சந்திரிகா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
  • நிட்டம்புவ ஹொரகொல்ல பண்டாரநாயக்க ஞாபகார்த்த நூலக வளாகத்தின் முதல் மாடியிலுள்ள கேட்போர் கூடத்தில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
  • தேர்தல் களத்தில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் அத்தனகலயில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் களத்தில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் அத்தனகலயில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிட்டம்புவ ஹொரகொல்ல பண்டாரநாயக்க ஞாபகார்த்த நூலக வளாகத்தின் முதல் மாடியிலுள்ள கேட்போர் கூடத்தில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க  அவர்கள் முன்னிலையில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அங்கு கருத்து வெளியிட்ட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தான் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும், அத்தனகல்ல பிரதேசத்தில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் விருப்பமான எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை எனக் கூறி ஒதுங்கிய சந்திரிகா! | Tamil Leader | We Lead the Nation