Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சரத் பொன்சேகா போரில் ஜெனரல் என்றாலும் அரசியலில் கோப்ரல் அளவுக்கும் அறிவு இல்லாதவராம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 11, 2024 • 11:34 AM

சரத் பொன்சேகா போரில் ஜெனரல் என்றாலும் அரசியலில் கோப்ரல் அளவுக்கும் அறிவு இல்லாதவராம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து விலகியமை கட்சிக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.
  • சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளும் தலைவர்களும் கைகோர்த்து வருகின்றனர்.
  • எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நாட்டின் அனைத்து மதங்களையும் இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது என்றார்.
எழுத்து அளவு:

பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து விலகியமை கட்சிக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது:
 
சரத் பொன்சேகா அரசியலுக்கு பொருந்தாதவர். அவர்  போரில் ஜெனரல் என்றாலும், அரசியலில் ஒரு கோப்ரல் அளவுக்கும் அவருக்கு அறிவு இல்லை.
 
சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளும் தலைவர்களும் கைகோர்த்து வருகின்றனர். இது ஒரு வரலாற்று தருணம். 
 
எதிர்காலத்தில் நாட்டில் உள்ள அனைத்து இனங்களையும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதியே நியமிக்கப்படுவார்.
 
இவ்வாறானதொரு ஜனாதிபதி நாட்டில் நியமிக்கப்பட்டால் மாத்திரமே நாட்டில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் தீர்வுகளை வழங்க முடியும்.
 
சஜித் பிரேமதாச நாட்டின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.
 
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நாட்டின் அனைத்து மதங்களையும் இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...