Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சஜித்தின் கூட்டமைப்புடன் இருந்தமையால் எதிர்க்கட்சி அரசியலை நான்கு வருடங்களாக முன்னெடுத்தோம்! - ரிஷாத்

T

The Leader Desk

ஆகஸ்ட் 11, 2024 • 6:05 AM

சஜித்தின் கூட்டமைப்புடன் இருந்தமையால் எதிர்க்கட்சி அரசியலை நான்கு வருடங்களாக முன்னெடுத்தோம்! - ரிஷாத்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக இறுதி முடிவை எதிர்வரும் 14 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாரை ஆதரிப்பது என்பது குறித்து மன்னார் மாவட்ட ஆதரவாளர்களுடன் சந்திப்பு இன்று சனிக்கிழமை (10) குஞ்சுக்குளம் பகுதியில் இடம்பெற்றது.
  • கடந்த 6 ஆம் திகதி எமது கட்சியின் உயர்பீடம் கூட்டப்பட்டபோது கட்சிக்குள் இரு வகையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
  • எனவே கட்சியின் உறுப்பினர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் கருத்துக்களை உள்வாங்கி அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் இரண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பலர் இருந்தமையினால் எதிர்வரும் 14 ஆம் திகதி எமது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளோம்.
எழுத்து அளவு:
கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக இறுதி முடிவை எதிர்வரும் 14 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாரை ஆதரிப்பது என்பது குறித்து மன்னார் மாவட்ட ஆதரவாளர்களுடன் சந்திப்பு இன்று சனிக்கிழமை (10)  குஞ்சுக்குளம் பகுதியில் இடம்பெற்றது. இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடு முழுவதும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் ஒரு கட்சி. நாட்டில் பத்து மாவட்டங்களில் பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கடந்த காலங்களில் போட்டியிட்டுள்ளது.
 
அதனடிப்படையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பது குறித்து மன்னார் மாவட்டத்தில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடும் வகையில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
 
மன்னார் உட்பட மேலும் பல மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை மேற்கொண்டு மக்களின் கருத்துக் கணிப்பை பெற்றுக் கொள்ள உள்ளோம்.
 
கடந்த 6 ஆம் திகதி எமது கட்சியின் உயர்பீடம் கூட்டப்பட்டபோது கட்சிக்குள் இரு வகையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
 
IMG 20240810 231556 800 x 533 pixel
 
எனவே கட்சியின் உறுப்பினர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் கருத்துக்களை உள்வாங்கி  அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் இரண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பலர் இருந்தமையினால் எதிர்வரும் 14 ஆம் திகதி எமது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளோம்.
 
கடந்த காலங்களில் சஜித்தின் கூட்டமைப்புடன் இருந்தமையினால் எதிர்க்கட்சி அரசியலை நான்கு வருடங்களாக முன்னெடுத்தோம்.
 
இந்நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,கட்சியும் 14 ஆம் திகதி  எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு,முழு மூச்சாக குறித்த வேட்பாளரை வெற்றி பெற செய்வதாக வாக்குறுதி வழங்கியுள்ளனர்.
 
அந்த வகையில் எதிர்வரும் 14 ஆம் திகதி எமது கட்சி ஆதரவு வழங்க உள்ள ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...