Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஜனநாயகத்தின் பெயரிலான மக்கள் விரோத ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும்! -சஜித் பிரேமதாச

T

The Leader Desk

ஆகஸ்ட் 10, 2024 • 3:02 PM

ஜனநாயகத்தின் பெயரிலான மக்கள் விரோத ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும்!  -சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிறிய தரப்பொன்றின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்டுள்ளனர்.
  • குறுகிய இலாபங்களுக்காக இந்நாட்டின் 220 இலட்சம் மக்களைப் பலிகடா ஆக்கி முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நியாயமற்ற ஆட்சி முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
  • ஹம்பாந்தோட்டை வீரகெடிய நகரில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் இன்று(10) கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • தொடர்ந்து உரையாற்றிய அவர் நட்பு வட்டார ரீதியாக நலன்களை பெறும் நிலைக்குப் பதிலாகத் தகுதி அடிப்படையிலான உரிய இடங்களையே வழங்க வேண்டும் என்பதே இளைஞர்கள் கோரும் மாற்றமாகும்.
எழுத்து அளவு:

அநீதி தலைவிரித்தாடுகிறது. சிறிய தரப்பொன்றின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தின் பெயரால் கொடுங்கோல் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறுகிய இலாபங்களுக்காக இந்நாட்டின் 220 இலட்சம் மக்களைப் பலிகடா ஆக்கி முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நியாயமற்ற ஆட்சி முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை வீரகெடிய நகரில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் இன்று(10) கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்து உரையாற்றிய அவர்
 
நட்பு வட்டார ரீதியாக நலன்களை பெறும் நிலைக்குப் பதிலாகத் தகுதி அடிப்படையிலான உரிய இடங்களையே வழங்க வேண்டும் என்பதே இளைஞர்கள் கோரும் மாற்றமாகும். ஊழல், மோசடி மற்றும் திருட்டுக்குப் பதிலாக வெளிப்படைத்தன்மை மேலாதிக்கத்திற்கு பதிலாக பங்கேற்பு ஜனநாயகத்தையுமே அவர்கள் கோரி நிற்கின்றனர்.
 
பல்வேறு தலைவர்களின் முட்டாள்தனமான முடிவுகளால் இன்று நாட்டு இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் சந்தை கல்வி, தொழில்முனைவு, சமூக பாதுகாப்பு என்பன இன்று காணாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜனநாயகத்தின் பெயரிலான மக்கள் விரோத ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும்! -சஜித் பிரேமதாச | Tamil Leader | We Lead the Nation