Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

நிலைமைகளை அவதானித்த பின்னரே எமது தீர்மானம் என்கிறார் உதுமான்கண்டு நாபிர்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 10, 2024 • 1:22 PM

நிலைமைகளை அவதானித்த பின்னரே எமது தீர்மானம் என்கிறார் உதுமான்கண்டு நாபிர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதற்கமைய சிறுபான்மைக் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக ஏற்கனவே தங்களால் எடுக்கப்பட்ட முடிவுகளை தற்போது வெளியிட்டு வருகின்ற நிலையில் இன்னும் சில கட்சிகள் அவர்களது கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை வெளியிடவில்லை.
  • வெறும் அமைச்சுக்காகவும் அதிகாரத்துககாகவும் அப்பாவி மக்களின் வாக்குகளை வேட்டையாடும் ஒரு நிலையே காணப்படுகிறது.
  • அதற்கமைய அவர்களும் தங்களது தீர்மானங்களை வெளியிடுகின்றபோது அதனை அவதானித்த பின்னரே எமது கோரிக்கைகள் மற்றும் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான தீர்மானத்தை வெளியிடுவோம்.
எழுத்து அளவு:

வேட்பாளர்களை ஆதரிப்பது தொடர்பாக சிறுபான்மைக் காட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை அவதானித்த பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான முடிவை அறிவிப்போம் என அம்பாறை மாவட்டத்தை மையமாகக் கொண்ட சமூகசேவை நிறுவனமான நாபீர் பௌன்டேஷன் நிறுவனர் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் தெரிவித்தார். 

செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்காக பிரதான வேட்பாளர்களால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளன.
 
இதற்கமைய சிறுபான்மைக் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக ஏற்கனவே தங்களால் எடுக்கப்பட்ட முடிவுகளை தற்போது வெளியிட்டு வருகின்ற நிலையில் இன்னும் சில கட்சிகள் அவர்களது கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை வெளியிடவில்லை. அதற்கமைய அவர்களும் தங்களது தீர்மானங்களை வெளியிடுகின்றபோது அதனை அவதானித்த பின்னரே எமது கோரிக்கைகள் மற்றும் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான தீர்மானத்தை வெளியிடுவோம்.
 
முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமைகளுக்கு எதிரான செயற்பாடுகள் போன்ற விடயங்களால்  மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
 வெறும் அமைச்சுக்காகவும் அதிகாரத்துககாகவும் அப்பாவி மக்களின் வாக்குகளை வேட்டையாடும் ஒரு நிலையே காணப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் காலாகாலமாக மக்களை அரசியல் ஏமாற்று வித்தைகள் ஊடாக ஏமாற்றி பாராளுமன்றம் சென்று அங்கு உறங்குநிலை பாராளுமன்ற உறுப்பினர் வரிசையில் இருக்கைகளை சூடாக்கிக் கொண்டிருக்கும் நிலைமைகளை இனியும் நாம் அனுமதிக்க முடியாது.
 
கிழக்கு மாகாணத்தில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் மக்களின் பொருளாதாரம் மற்றும் உரிமைகள் தொடர்பில் நாம் ஒரு திடமான திட்டங்களை  வரைந்துள்ளோம். அவற்றினை நாங்கள் பிரதான வேட்பாளர்களிடம் முன்வைக்கும் போது அது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை வழங்குகின்ற ஜனாதிபதி வேட்பாளருக்கே எமது ஆதரவு இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நிலைமைகளை அவதானித்த பின்னரே எமது தீர்மானம் என்கிறார் உதுமான்கண்டு நாபிர்! | Tamil Leader | We Lead the Nation