Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்து பேசப் போவதாக நாமல் தெரிவிப்பு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 10, 2024 • 11:32 AM

தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்து பேசப் போவதாக நாமல் தெரிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.
  • சுமந்திரனுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷவுக்கும் இடையில் இன்று (10) காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
  • எதிர்காலத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக நாமல் ராஜபக்க்ஷ கூறியதாக ஏ.
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் நாளை 11ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சிக் கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளது.
எழுத்து அளவு:

நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரனுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷவுக்கும் இடையில்

இன்று (10) காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஏ, எம். ஏ. கொழும்பில் சுமந்திரனின் இல்லத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசமும் கலந்து கொண்டுள்ளார்.

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக நாமல் ராஜபக்க்ஷ கூறியதாக ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம்

நாளை 11ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சிக் கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.சுமந்திரன், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் தீர்மானத்தை தாம் எதிர்ப்பதாக பகிரங்கமாக தெரிவித்ததுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுமாறு தென்னிலங்கையைச் சேர்ந்த பிரதான வேட்பாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் எனவும் ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்து பேசப் போவதாக நாமல் தெரிவிப்பு! | Tamil Leader | We Lead the Nation