Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

தனி நபர்கள் நன்மையடையும் தீர்மானத்தை ரிசாத் பதியுதீன் எடுக்கக் கூடாது! - முஷாரப் எம்பி

T

The Leader Desk

ஆகஸ்ட் 10, 2024 • 8:44 AM

தனி நபர்கள் நன்மையடையும் தீர்மானத்தை ரிசாத் பதியுதீன் எடுக்கக் கூடாது!  - முஷாரப் எம்பி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நன்மை கருதி மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் ஜனாதி பதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சட் டத்தரணி எஸ்.எம்.எம்.
  • இனவாதமில்லாத ஒரு தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எல்லோராலும் மதிக்கப்படுகிறார்.
  • முஷாரப் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
எழுத்து அளவு:
நன்மை கருதி மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் ஜனாதி பதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சட் டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
 
ஜனாதிபதித் தேர்தல் தொடர் பில் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
நமது சமூகமும், நாடும் எதிர்பார்க்கும் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காணப்படுகின்றார்.
 
விரும்பியோ, விரும்பாமலோ முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
 
இவ்வாறான நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதியை ஆதரிக்கும் முடிவை எடுத்து அவருடன் இணைந்து கொள்ள வேண்டும்.
 
இனவாதமில்லாத ஒரு தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எல்லோராலும் மதிக்கப்படுகிறார். சமூகம் பாதிக்கப்பட்டு தனிப்பட்ட நபர்கள் நன்மையடையும் தீர்மானத்தை ரிசாத் பதியுதீனும் மக்கள் காங்கிரஸ் கட்சியும் எடுக்கக் கூடாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைவலுவான நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்.
 
அதுமட்டுமல்ல மாவட்டங்களின் அபிவிருத்திக்காக எதிர்க்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோடிக்கணக் கான ரூபா பணத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒதுக்கீடு செய்துள்ளமை பாராட்டத்தக்க விடய
மாகும். 
 
இவ்வாறு நாட்டை மீட்ட தலைவருக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமையாகும். 
 
காலத்தை நாம் கடக்க முடியாது. காலம் நம்மைக் கடந்து விடும். அதனால் ரிசாத் பதியுதீன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் தீர் மானத்தை விரைவாக எடுத்து அவ ருடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
இன, மத, மொழி, கட்சி வேறு பாடுகளை கடந்து ஒரே தேசமாக நாட்டை வெற்றிக் கொள்ள ஜனா திபதி ரணில் விக்கிரமசிங்கவை வெற்றியடையச் செய்ய அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுவோம் என அவர் தெரிவித்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...