Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்: பிரதமர் தினேஷும் மறுத்து விட்டார்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 6, 2024 • 3:42 PM

மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்: பிரதமர் தினேஷும் மறுத்து விட்டார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் நிறுத்தப்படுவதனை தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நிராகரித்துள்ளதால், பிரதமர் தினேஷ் குணவர்தனவை போட்டியிடுமாறு கோரப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், நாமல் ராஜபக்க்ஷவும் மொட்டுக் குழுவும் தற்போது ஜனாதிபதி வேட்பாளரை கண்டுபிடிப்பதில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் அதே வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.
  • ஜனாதிபதி வேட்புமனுவை ஏற்றுக் கொள்ளுமாறு மொட்டுக் கட்சித் தலைவர்களிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில்  நிறுத்தப்படுவதனை தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நிராகரித்துள்ளதால்,  பிரதமர் தினேஷ் குணவர்தனவை போட்டியிடுமாறு கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்புமனுவை ஏற்றுக் கொள்ளுமாறு மொட்டுக் கட்சித் தலைவர்களிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பிரதமர் இந்த யோசனையை நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நாமல் ராஜபக்க்ஷவும் மொட்டுக் குழுவும் தற்போது ஜனாதிபதி வேட்பாளரை கண்டுபிடிப்பதில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் அதே வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

இதேவேளை, தம்மிக்க பெரேரா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மறுத்ததால், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தயார் என மொட்டு தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலில் இருந்து தம்மிக்க பெரேரா விலகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அவரது தேர்தல் பிசரசாரத்தின் உத்தியாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...