Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டத்திலிருந்து யஹியாகான் ஏன் வெளியேற்றப்பட்டார்?

T

The Leader Desk

ஆகஸ்ட் 4, 2024 • 1:35 PM

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டத்திலிருந்து யஹியாகான் ஏன் வெளியேற்றப்பட்டார்?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யஹியாகானை வெளியேற்றத் தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
  • தலைவர் யஹியாகானுடைய வகிபாகம் பற்றி பாராட்டி , இந்த முடிவை மனவருத்தத்துடன் எடுக்கவேண்டிய சூழ்நிலையை விவரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கட்சியின் தலைவர் ஹக்கீமின் உடனடி நடவடிக்கையாக,யஹியாகான் உயர்பீடம் மற்றும் அடுத்த உயர்பீடக் கூட்டம் ஆகிய இரு அமர்வுகளில் பங்குபற்றுவதனை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

உயர்பீட கூட்டம் இன்று  (04) ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் இடம்பெற்றபோது , லுஹர் தொழுகைக்கான பாங்கு ஒலித்த நேரத்தில் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இடைவேளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் பதிவிறக்கம் செய்ததமை விஷமிகளுக்கு கட்சியை அநாகரிகமாக முகநூலில் விமர்சிக்க இடமளித்தமை போன்ற காரணங்களால் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்  உயர்பீட உறுப்பினர் ஏ.ஸி. யஹியாகானை வெளியேற்றத் தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் தலைவர் ஹக்கீமின் உடனடி நடவடிக்கையாக,யஹியாகான் உயர்பீடம் மற்றும் அடுத்த உயர்பீடக் கூட்டம் ஆகிய இரு அமர்வுகளில்
பங்குபற்றுவதனை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
 
தலைவர் யஹியாகானுடைய வகிபாகம் பற்றி  பாராட்டி , இந்த முடிவை மனவருத்தத்துடன் எடுக்கவேண்டிய சூழ்நிலையை விவரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, தலைவரோடு கைகுலுக்கி , மிகவும் முன்மாதிரியான நற்பண்போடு  யஹியாகான் சிரித்த முகத்துடன் வெளியேறியதை அவதானிக்க முடிந்தது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...