Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

யாழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி! உதயன் பணிமனைக்கும் சென்றார்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 3, 2024 • 2:15 PM

யாழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி! உதயன் பணிமனைக்கும் சென்றார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வேண்டியது அவசியமென்பதை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன, மத பேதமின்றி நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் இலங்கையர் என்ற வகையில் அனைவரும் ஒன்றுபட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
  • பிரபாகரன் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.
  • ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (03) பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் பணிமனைக்கு சென்றிருந்தோடு, அதன் ஊழியர்களையும், ஏனைய ஊடகவியலாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
எழுத்து அளவு:

வேண்டியது அவசியமென்பதை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன, மத பேதமின்றி நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் இலங்கையர் என்ற வகையில் அனைவரும் ஒன்றுபட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (03) பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் பணிமனைக்கு சென்றிருந்தோடு, அதன் ஊழியர்களையும், ஏனைய ஊடகவியலாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது உதயன் பத்திரிகை பணிமனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், தலைமை ஆசிரியர் த. பிரபாகரன் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.

அதனையடுத்து ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, அவர்களின் கேள்விகளுக்கும் சாதகமான பதில்களை வழங்கினார்.

IMG 20240803 194018 800 x 533 pixel

நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்க வேண்டும் என்பதே முதல் பிரச்சினையாக இருந்ததாகவும், கடந்த ஜூன் மாதத்தில் அந்த பிரச்சினையை நிறைவுக்கு கொண்டு வர முடிந்திருந்தமையினால் தற்போது ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவது குறித்து சிந்தித்து வருவதாகவும் தெரிவித்தாார்.     

கடந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களின் போது இளைஞர்கள் பெரும்பாலும் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பிலான கோரிக்கைகளையே முன்வைத்தனர். அதனால் வடக்கிலும், தெற்கிலும் உள்ள இளையோரின் எதிர்பார்ப்புக்களில் வேறுபாடுகள் தெரியவில்லை என்றும் கூறினார்.

மாகாண சபைகளை வலுவூட்டி அந்தந்த மாகாணங்களின் அபிவிருத்திக்கான பரந்தளவான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதே தனது எதிர்பார்ப்பாகும் என தெரிவித்த ஜனாதிபதி,  அனைத்து மாகாணங்களுக்கும் மத்திய அரசாங்கம் உதவிகளை வழங்குமெனவும் உறுதியளித்தார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...