Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

பெண்களால் ஆண்களுக்கு பாலியல் தொல்லையா? பொலிஸில் முறையிடலாம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 3, 2024 • 3:57 AM

பெண்களால் ஆண்களுக்கு பாலியல் தொல்லையா? பொலிஸில் முறையிடலாம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆணுக்கு பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்றால் முறைப்பாடு வழங்க வாய்ப்புள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச் சட்ட திருத்தச் சட்டத்தின் 345 ஆவது பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும் என அதன் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
  • இதன் விளைவாக, ஓர் ஆண் அல்லது சிறுவன் ஏதேனும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானால், அவர் தயக்கமின்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடலாம்.
எழுத்து அளவு:

ஆணுக்கு பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்றால் முறைப்பாடு வழங்க வாய்ப்புள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச் சட்ட திருத்தச் சட்டத்தின் 345 ஆவது பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும் என அதன் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
குறித்த குற்றச் செயல் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துவதில் ஆண், பெண் என்ற பாகுபாடு காட்டப்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
இதன் விளைவாக, ஓர் ஆண் அல்லது சிறுவன் ஏதேனும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானால், அவர் தயக்கமின்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடலாம்.
 
சமூகத்தில் பதிவாகும் சம்பவங்களை அவதானிக்கும்போது, ​​பொலிஸ் நிலையங்களில் வயது முதிர்ந்த பெண்களால் சிறிய ஆண் பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
 
சிறுவர் மட்டுமின்றி, வயது முதிர்ந்த ஆணும் தனது விருப்பத்துக்கு மாறாக ஒரு பெண்ணால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு என பொலிஸ் தெரிவித்துள்ளது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...