Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கிளப் வசந்த கொலையாளிகள் பயன்படுத்த கொள்வனவு செய்த பஸ் தொடர்பான தகவல்கள் வெளியாகின

T

The Leader Desk

ஆகஸ்ட் 2, 2024 • 9:04 AM

கிளப் வசந்த கொலையாளிகள் பயன்படுத்த கொள்வனவு செய்த பஸ் தொடர்பான தகவல்கள் வெளியாகின

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெரேரா எனப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரைச் சுட்டுக் கொன்று நால்வரை படுகாயமடையச் செய்த துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்ற WPNC1976 பஸ் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
  • மேல்மாகாண தெற்கு குற்றப்பிரிவின் நிலைய கட்டளைப் பொறுப்பதிகாரி - 0718596065 அதுருகிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி - 0718591657 இது தொடர்பில் தகவல் அளிப்பவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
  • கிளப் வசந்தவை கொலை செய்ய பாதாள உலக தலைவர் லொகு பெட்டி செலவிட்ட கோடிக்கணக்கான ரூபாவில், கொலையின் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்காக இந்த பஸ்ஸை கொள்வனவு செய்ய 14 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
  • முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் பிரகாரம், கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், மிரிஸ்ஸ பொல் அதுமோதர அம்ப கஹவத்த பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவரின் பெயரில் ஒரு இலட்சம் முற்பணம் செலுத்தி பஸ் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எழுத்து அளவு:

பெரேரா எனப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரைச் சுட்டுக் கொன்று நால்வரை படுகாயமடையச் செய்த துப்பாக்கிதாரிகள்  தப்பிச் சென்ற WPNC1976 பஸ் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

மேல்மாகாண தெற்கு குற்றப்பிரிவின் நிலைய கட்டளைப் பொறுப்பதிகாரி - 0718596065

அதுருகிரிய பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி - 0718591657

இது தொடர்பில் தகவல் அளிப்பவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கிளப் வசந்தவை கொலை செய்ய பாதாள உலக தலைவர் லொகு பெட்டி செலவிட்ட கோடிக்கணக்கான ரூபாவில், கொலையின் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்காக இந்த பஸ்ஸை கொள்வனவு செய்ய 14 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் பிரகாரம், கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், மிரிஸ்ஸ பொல் அதுமோதர அம்ப கஹவத்த பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவரின் பெயரில் ஒரு இலட்சம் முற்பணம் செலுத்தி பஸ் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒன்லைனில் மீதமுள்ள தொகையை ஒரே நேரத்தில் செலுத்தப்பட்டுள்றது் இதையடுத்து அந்த பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.

வசந்த கொலையின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் காரில் ஏறி, வேனில் ஏறி சிறிது தூரம் சென்று கொரத்தோட்டை கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸில் ஏறி அதிவேகப் பாதை வழியாக கதிர்காமம் பஸ் நிலையம் வரை பயணித்துள்ளனர்.

பாதாள தலைவர் லொகு  பெட்டியின் திட்டப்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்லவும் பாதுகாப்புப் படையினரின் கவனத்திலிருந்து தப்பிக் கொள்ளவும் துப்பாக்கிகளை ஏற்றிச் செல்லவும் இந்தப் பஸ் வாங்கப்பட்டதாக இதுவரையான பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...