பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பறித்து சில பக்கங்களை கிழித்து வீசிய ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் சார்ஜன்டின் வாகன அனுமதிப்பத்திரத்தை பறித்து கிழித்து வீசிய ஆசிரியை கொழும்பில் கைது!
T
The Leader Desk
ஆகஸ்ட் 2, 2024 • 5:39 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பறித்து சில பக்கங்களை கிழித்து வீசிய ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் புறக்கோட்ட டைட்டஸ் கட்டிடத்துக்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த போது, தடை செய்யப்பட்ட பகுதியில் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:
புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் புறக்கோட்ட டைட்டஸ் கட்டிடத்துக்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த போது, தடை செய்யப்பட்ட பகுதியில் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது, சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கச் சென்ற வேளையில் சாரதியின் மனைவியான ஆசிரியை, பொலிஸ் உத்தியோகத்தருக்குச் சொந்தமான சாரதி அனுமதிப்பத்திரத்தை வலுக்கட்டாயமாக பறித்து அதன் சில பக்கங்களை கிழித்து எறிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இதன்படி, பலவந்தமாக கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்துக்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

